இரண்டு நாள்களாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் புல்வாமா தாக்குதல்குறித்தும், அபிநந்தன் விடுதலை குறித்தும் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. இன்று புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடித்தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் செளத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே பேசியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யிருக்கிறது.
கடந்த 2019, பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரிலுள்ள புல்வாமாபகுதியில் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத்தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட்பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து பிப்ரவரி 27-ம் தேதி, இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் F16 போர் விமானம் அத்துமீறிநுழைந்தது. அதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த சண்டையில் இந்திய விமானபடையின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தான் பகுதியின் எல்லையோர கிராமத்தில் கீழேவிழுந்து நொறுங்கியது. அதிலிருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. அபிநந்தனை விடுவிக்குமாறு பல்வேறு உலகநாடுகள் அழுத்தம் கொடுத்தநிலையில், மார்ச் 1-ம் தேதி விடுவிக்கப்பட்ட அபிநந்தன், அட்டாரி – வாகா எல்லைவழியாக இந்தியா திரும்பினார்.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PML-N) கட்சி எம்.பி அயாஸ் சாதிக், “கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டபோது, பாகிஸ்தானில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இம்ரான்கான் கலந்துகொள்ள மறுத்த அந்த கூட்டத்தில் பி.பி.பி., பி.எம்.எல் கட்சியின் தலைவர்கள், ராணுவத்தலைமை ஜெனரல் ஜாவேத் பஜ்வா ஆகியோர் கலந்துகொண்டு இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்க பரிந்துரைசெய்தோம். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, `ஒருவேளை பாகிஸ்தான், விங்கமாண்டர் அபிநந்தன் வர்தமானை விடுவிக்கா விட்டால், இன்று இரவு 9 மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் மீது போர்தொடுக்கும்’ என்று கூறினார்.
அப்போது, பாகிஸ்தான் ராணுவத் தலைமை ஜெனரல் கமர்ஜாவேத் பஜ்வாவின் கால்கள் நடுங்கின’’ என்று நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிவலைகளை ஏற்படுத்திய நிலையில் இன்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் தெரிவித்தகருத்து மீண்டும் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது.
இன்று நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் செளத்ரி, புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடித்தொடர்பு இருப்பதாக ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், `புல்வாமா தாக்குதல் இம்ரான்கான் அரசின் பெரும் சாதனை’ என்று குறிப்பிட்டார். பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரே இந்தியாவின் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்குத் தாங்கள்தான் காரணம் என ஒப்புதல் அளித்திருக்கும் விவகாரம் இந்தியா, பாகிஸ்தான் இடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
2folders