சுமார் ஓராண்டிற்கு பிறகு அமித்ஷா சென்னை வர உள்ளது பாஜக தலைவர்களை மட்டும் அல்லாமல் தமிழக அரசியல்களத்தை உற்றுநோக்கும் அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க உள்துறை அமைச்சரும் அப்போதைய பாஜக தலைவருமான அமித்ஷா வந்திருந்தார். அதுதான் பாஜக தலைவரான பிறகு தமிழகத்தில் அரசியல் ரீதியாக அமித் ஷா மேற்கொண்ட முதல் பயணமாகும். அதற்குமுன்னர் பாஜக தலைவராக இருந்தபோது தேர்தல் பிரச்சாரங்களுக்கு கூட அமித் ஷா சென்னை பக்கம் வரவில்லை. ஒருமுறை அவர் சென்னை வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று பின்னர் ரத்து செய்யப்பட்டது.
ஆனால் கடந்தமுறை சென்னை வந்தபோது கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். ஆனால் அப்போத அந்த ஆலோசனை பெரியளவில் எந்த முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அமித் ஷாவின் வருகை துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவிற்கு மேலும் அந்தவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டிருந்தார். இதனால் அமித்ஷா சென்னையில் நடத்திய ஆலோசனை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால் இந்த முறை அப்படிஇல்லை விரைவில் தமிழகம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டும் பாஜக படுதோல்வியை சந்தித்தது. சட்டமன்ற தேர்தலிலும் இதேகூட்டணி தான் நீடிக்குமா என சந்தேகம் நிலவுகிறது.
பாஜகவை பொறுத்தவரை அடுத்தஆண்டு ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இவற்றில் தமிழகம்தவிர்த்து மற்ற மாநிலங்களான மேற்குவங்கம், அருணாச்சல், ஒடிசா மற்றும் கேரளாவில் தனித்தே களம்காண உள்ளது. மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைவது உறுதி என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன. அருணாச்சல் பிரதேசத்திலும் பாஜக வெற்றிக்கொடி நாட்டிவிடும்.
ஆனால் கேரளா மற்றும் தமிழகம்தான் பாஜகவிற்கு மிகப்பெரிய சவால் . தமிழகத்தை பொறுத்தவரை வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். எனவே கூட்டணி வியூகத்தை இறுதி செய்யவே அமித்ஷா சென்னை வர உள்ளதாக கூறுகிறார்கள். சென்னையில் அவர் பாஜக முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து பேச உள்ளார்.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |