‘மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் தேர்தல் வெற்றியுடன் சரத் பவாரின் நீண்டகால துரோக அரசியல் முடிவுக்கு வந்தது,’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
ஷிர்டியில் நடந்த மாநில பா.ஜ., மாநாட்டில் அமித் ஷா பேசியதாவது:
மூத்த அரசியல்வாதி சரத் பவார் 1978 முதல் மஹாராஷ்டிராவில் துரோக அரசியலை விளையாடினார். பா.ஜ.,வின் மகத்தான வெற்றியுடன் அவரது அரசியல் முடிவுக்கு வந்தது.
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் வாரிசு அரசியலையும் துரோகத்தையும் நிராகரித்து விட்டதன் மூலம் மகாராஷ்டிர மக்கள், சரத் பவாருக்கும், உத்தவ் தாக்கரேவுக்கும் தங்களது நிலை என்ன என்பதை காட்டிவிட்டனர்.
டில்லி, மேற்கு வங்கம், பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் காங்கிரசுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளால் எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.
மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் வெற்றி நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். வரலாற்று சிறப்புமிக்க வெற்றி இந்தியாவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நம்பிக்கையை உயர்த்தியது. அடுத்த மாதம் நடைபெறும் டில்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |