பீகாரில் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைகொண்ட சட்ட சபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்ததேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் மூத்த தலைவரும், முதல்மந்திரியுமான நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக. கூட்டணி, இளம்தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியைவிட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்கவைத்தது.
இந்தநிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் நிதீஷ்குமார் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் பாகு சவுகான் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், நிதீஷ்குமார் தொடர்ச்சியாக 4-வது முறையாக பீகார் முதல்வராகியுள்ளார். பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணுதேவி ஆகியோர் துணை முதல்வர்களாப் பதவியேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, பீகாரின் முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துசெய்தியில்,
பீகார் முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள். பீகாரின் வளர்ச்சிக்காக தேசியஜனநாயகக் கூட்டணி குடும்பம் ஒன்றிணைந்து செயல்படும்.
மேலும் பீகார் வளர்சிக்காக மத்தியஅரசால் முடிந்த அனைத்து ஆதரவையும் வழங்க உறுதி அளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |