திமுகவும் பாஜகவும் இணைந்து ஒருபோராட்டத்தை நடத்தி உள்ளனர் .தூத்துக்குடி ஸ்டேட்பேங்க் காலனி 80 அடி சாலையில் ஒருவிநாயகர் கோயில் இருக்கிறது.. இது ரொம்பகாலமாக உள்ள கோயில் என்பதால், சுற்றுவட்டாரத்தில் ஃபேமஸ் ஆனது.
இந்தபகுதியில் கழிவுநீர் ஓடை அமைக்க ஏற்பாடு நடந்துவருகிறது.. அதற்காக ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலை இடிக்க, நேற்று முன்தினம் இரவு மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தவிஷயம் தெரிந்ததும் பாஜகவினர் விரைந்து கோயில் பகுதிக்கு திரண்டு வந்துவிட்டனர்.
கோயிலை இடிக்ககூடாது என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் இறங்கினர்.. இந்தவிஷயம் கேள்விப்பட்ட திமுக எம்எல்ஏ கீதாஜீவனும் சம்பவ இடத்துக்குவந்து, அவரும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.. ஒரேநேரத்தில், ராத்திரி நேரத்தில், கோயில் நிர்வாகத்தினர், பாஜகவினர், திமுகவினர் என மொத்தமாக சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், என்ன செய்வதென்றே தெரியாமல், அதிகாரிகள் கோயிலை இடிக்காமல் திரும்பி சென்று விட்டனர்.
ஆனால், நேற்றுகாலை மறுபடியும் கோயிலை இடிக்க அவசர அவசரமாக பொக்லைன் எந்திரத்துடன் அதிகாரிகள் வந்தனர்.. இந்தமுறை பாதுகாப்புக்காக போலீசாரையும் அழைத்து வந்திருந்தனர்.. இதுதெரிந்து, மறுபடியும் கீதாஜீவனும், பாஜகவினரும் திரண்டுவந்தனர்.. அப்படியே நடுரோட்டிலேயே உட்கார்ந்து கோயிலை இடிக்கக்கூடாது என்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் மறுபடியும் கோயிலை இடிக்கமுடியாமல் அதிகாரிகள் விழித்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் கோவிலை இடிப்பதல்ல என்று முடிவு எடுக்கப்பட்டது.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |