தி.மு.க சுயமரியாதை இல்லாதவர்களின் கட்சி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நென்மேனி கிராமத்தின் வழியே செல்லும் வைப்பாற்றில் அரசுமணல்குவாரி அமைக்கத் திட்டமிட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், வைப்பாற்றில் மணல்குவாரி அமைக்க அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், மணல்குவாரி அமைத்தால் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பாதிக்கப்படும், தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு வறட்சிஉண்டாகும், மண்ணின் கனிம வளச் சத்துகள் நீர்த்துப்போகும் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல்வேறு அமைப்பினர் மணல்குவாரிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வைப்பாற்றில் அரசு மணல்குவாரி அமைப்பதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இருக்கன்குடி மாரியம்மன்கோயில் அருகே இன்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பா.ஜ.க தேசிய உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

போராட்டத்தையடுத்து, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஹெச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “ஆறுகளில் மணல்அள்ளுவதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால், இருக்கன்குடி வைப்பாற்றில் மணல்குவாரி அமைப்பதை அரசு கைவிட வேண்டும். இந்தப் பகுதியில் மணல்குவாரி அமையும்பட்சத்தில் விவசாயம் பாதிக்கப்படும். எதிர்ப்புகளைமீறி இங்கு மணல்குவாரி அமைப்பதை அரசு கைவிடவில்லை எனில், என் தலைமையில் பாஜக-வினர் மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம். கோயில் நிர்வாகங்களை ஆய்வுசெய்ய அறநிலையத்துறை சார்பில் குழுஅமைப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், கோயில்களில் ஆய்வுசெய்ய யார்செல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளே மதம்மாறியிருப்பதாகக் கூறும் சூழ்நிலையில் கோயில் நிர்வாகத்தை ஆய்வுசெய்ய குழு அமைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுநலன் என்ற போர்வையில் கோயில் நிதியை ஆன்மிகம் தவிர்த்த எந்த ஒருசெயல்பாட்டுக்கும் பயன்படுத்தக் கூடாது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் பட்டியலில் தீபாவளி, பொங்கல் பண்டிகை இல்லை. ஒருகாலத்தில் தமிழகத்தில் பா.ஜ.க இல்லை என்றுசொன்ன காலம் போய் இன்று தமிழகத்தில் எதிர்க்கட்சிபோல் பா.ஜ.க செயல்படுகிறது. காயத்ரி ரகுராம் பாதிக்கப்பட்டிருந்தால் தனிப்பட்டமுறையில் மாநிலத் தலைமையிடமோ அல்லது தேசியத் தலைமையிடமோ தெரிவித்திருக்கலாம். எனவே, கட்சிப் பிரச்சனை குறித்து பொது இடத்தில் விவாதிக்கமாட்டேன். கட்சிகுறித்து பொதுவெளியில் யாரும் பேசவேண்டாம். பாரத பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து தேசியத்தலைமை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இந்தியாவிலுள்ள 544 தொகுதியிலும் நிற்கதகுதியான நபர் என்றால், அது பிரதமர் நரேந்திரமோடி மட்டுமே. அப்படி அவர் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் மகிழ்ச்சியுடன் பணியாற்ற கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், இதுபற்றி எந்த முடிவும் பா.ஜ.க தலைமையிடத்திலிருந்து அறிவிக்கப்படவில்லை.

பா.ஜ.க மாநிலத் தலைவராகச் செயல்படுவதற்கு அண்ணாமலை தகுதிஇல்லாதவர் என தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இந்தவேளையில், முதலில் தி.மு.க தலைவராக இருப்பதற்கு முதல்வர் மு.க‌.ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா, இல்லையா என்பதை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெளிவுப்படுத்த வேண்டும். எனவே, பா.ஜ.க கட்சியைப் பற்றி அவர் பேசத் தேவையில்லை. அமைச்சர் கே.என்.நேரு, `இன்பநிதிக்கு குடைபிடிப்பேன்’ என்று சொல்வதிலிருந்தே தி.மு.க சுயமரியாதை இல்லாதவர்களின் கட்சி, தி.மு.க-வுக்கு சுயமரியாதை என்பதேகிடையாது எனத் தெரிகிறது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்தியஅரசின் திட்டத்துக்கு, கனிமொழி ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...