புதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விருப்பத் தேர்வையும் புதிய சட்ட பாதுகாப்பையும் வழங்குகின்றன

வாரணாசி-பிரயாக்ராஜ் தேசியநெடுஞ்சாலை -19 வழித்தடத்தில் 6-வழி அகலச்சாலை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், காசியை அழகுபடுத்த முன்பு மேற்கொண்ட திட்டத்துடன், இணைப்பு பணிகள் முடிவடைந்ததையும் நாம் பார்க்கிறோம் . வாரணாசியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய நெடுஞ்சாலையில் இதற்கு முன் செய்யப்படாத பணிகள், பாலங்கள், சாலைகளை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்பட்டுள்ளன .

இந்த சாலைகள் விரிவாக்கதிட்டம், விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். கிராமங்களில் நவீனசாலைகளுடன், குளிர்பதன கிடங்குகள் போன்ற கட்டமைப்பு களையும் உருவாக்கும் முயற்சிகள் பலஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி உருவாக்கப் பட்டுள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, 2 ஆண்டுகளுக்குமுன்பு சண்டாலியில், கருப்பரிசி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்தாண்டு, ஒரு விவசாயகுழு அமைக்கப்பட்டு, காரீப்பருவத்தில் விளைவிக்க இந்த அரிசி சுமார் 400 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. சாதாரண அரிசி கிலோ ரூ.35 முதல் ரூ.40க்கு விற்கும்போது, கருப்பரிசி கிலோ ரூ.300க்கு விற்கப் பட்டது. முதல் முறையாக, இந்த அரசி ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய பட்டுள்ளது. அதுவும் கிலோ ரூ.800 விலையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் தயாரிப்புகள் உலகம்முழுவதும் பிரபலம் , மிகப் பெரிய சந்தையும், அதிகவிலையும் நமது விவசாயிகளுக்கு ஏன் கிடைக்ககூடாது. வேளாண் சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு புதிய விருப்ப தேர்வுகளையும், புதிய சட்டபாதுகாப்பையும் வழங்கியுள்ளன, அதேநேரத்தில், பழையமுறையும் தொடர்கிறது. ஒருவர் விரும்பினால் அதில்தொடரலாம். முன்பு சந்தைக்கு வெளியே விற்றால் சட்டவிரோதம் , ஆனால் தற்போது, மண்டிக்கு வெளியே நடக்கும் விற்பனைமீது சிறு விவசாயியும் சட்டநடவடிக்கை எடுக்கமுடியும்.

கொள்கைகள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அரசு உருவாக்குகிறது.  ‘‘முன்பு அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கபட்டன, ஆனால் தற்போது, வெறும் சந்தேகங்களின் அடிப்படையில் விமர்சனம் உள்ளது . நடக்காதது பற்றியும், இனிமேல் நடக்கப்போகாத விஷயம் பற்றியும் சமூகத்தில் குழப்பம் பரப்பப்படுகிறது. இவர்கள் எல்லாம் பலதசாப்தங்களாக விவசாயிகளை தொடர்ச்சியாக ஏமாற்றியவர்கள் .

குறைந்தபட்ச ஆதரவுவிலை முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், கொள்முதல் குறைந்த அளவில் நடந்தது. இந்தமோசடி பல ஆண்டுகள் தொடர்ந்தது. விவசாயிகள் பெயரில், கடன் தள்ளுபடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சென்றடையவில்லை. விவசாயிகள் பெயரில் பெரியதிட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஒருரூபாயில் 15 பைசாதான், விவசாயியை சென்றடைகிறது என முந்தைய ஆட்சியாளர்களே நம்பினர். இது திட்டங்களின் பெயரில் நடந்தமோசடி.

கடந்த காலம் முழுவதும் மோசடிகள் இருந்தபோது, இரண்டுவிஷயங்கள் மட்டும் இயல்பாக இருந்தன . முதலாவது அரசின் வாக்குறுதிகள் பற்றி விவசாயிகள் சந்தேகத்துடன் இருந்தனர். இரண்டாவது வாக்குறுதியை மீறுபவர்கள், பொய்யை பரப்பவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். அது தான் இன்னும் நடக்கபோகிறது. மத்திய அரசின் சாதனைகளை பார்க்கும்போது, உண்மை தானாகவெளிவரும். யூரியாவின் கள்ள சந்தையை நிறுத்தி, விவசாயிகளுக்கு தேவையான யூரியா வழப்படும் என அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றியது. ஸ்வாமிநாதன் ஆணையம் பரிந்துரைப்படி, உற்பத்தி விலையைவிட 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றியது. இந்தவாக்குறுதி காகிதத்தில் மட்டும் நிறைவேற்றப்பட வில்லை, இது விவசாயிகளின் வங்கி கணக்கை சென்றடைந்தது.

2014ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில், விவசாயிகளிடமிருந்து ரூ.6.5 கோடி அளவுக்கு பருப்புகொள்முதல் செய்யப்பட்டது, அடுத்த 5 ஆணடுகளில் ரூ.49,000 கோடிக்கு பருப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன, இது 75 மடங்கு உயர்வு.

2014ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடிக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், அதை தொடர்ந்த 5 ஆண்டுகளில், ரூ.5 லட்சம் கோடிக்கு குறைந்தபட்ச ஆதரவுவிலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இது இரண்டரை மடங்கு அதிகம் எனவம் பிரதமர் தெரிவித்தார். 2014ம் ஆண்டுக்கு முந்தை 5 ஆண்டுகளில், கோதுமை ரூ.1.5 லட்சம் கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டதாகவும, அதற்கு பிந்தைய 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடிக்கு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இது 2 மடங்கு அதிகம் எனவும் பிரதமர் தெரிவித்தார். குறைந்தபட்ச ஆதரவு விலையும், மண்டிகளும் ஒழிக்கப்படக்கூடும் என்றால், அரசு இவ்வளவு செலவு செய்யுமா? என பிரதமர் கேள்வி எழுப்பினார். மண்டிகள் நவீன மயமாக்கத்துக்கு, அரசு கோடிக்கணக்கில் செலவுசெய்கிறது என்பதை அவர் வலியுறுத்தினார்.

எதிர்கட்சிகளை விமர்சித்த பிரதமர், பிரதமரின் கிஷான்சம்மான் நிதி பற்றி கேள்வி எழுப்புபவர்கள், தேர்தலை முன்னிட்டு இந்தநிதி வழங்கப்படுவதாகவும், தேர்தலுக்குப்பின் இந்தப்பணம் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என வதந்தி பரப்புகின்றனர் . எதிர்கட்சி ஆளும் ஒருமாநிலத்தில், அரசியல் நோக்கம் காரணமாக, இந்த திட்டத்தின் பயன்களை விவசாயிகள் பெற அனுமதிக்கப் படவில்லை என பிரதமர் கூறினார். அரசின் உதவிகள், 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இதுவரை, விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி சென்றடைந்துள்ளது என பிரதமர் கூறினார்.

ஆண்டாண்டு கால மோசடி மக்களை சந்தேகம் அடைய செய்கிறது, தற்போது மோசடி இல்லை எனவும், கங்கை நீரைபோன்ற தூய்மையான நோக்கத்துடன் ஒவ்வொரு வேலையும் செய்யப்படுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் மாயத்தோற்றத்தை பரப்புபவர்கள், மக்கள் முன்பு தொடர்ந்து அம்பலப்படுத்தப் படுகின்றனர். அவர்களின் பொய்களை விவசாயிகள் புரிந்து கொள்ளும் போது, மற்றொரு விஷயம் பற்றி அவர்கள பொய்யை பரப்பத் தொடங்குகின்றனர். கவலைப்படும் விவசாய குடும்பங்களுக்கு அரசு தொடர்ச்சியாக பதில்அளித்து வருகிறது என பிரதமர் கூறினார். வேளாண் சீர்திருத்தம் பற்றி இன்று சந்தேகப்படும் விவசாயிகள், எதிர்காலத்தில் இதே சீர்திருத்தத்தை பின்பற்றி தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்வர் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...