எட்டிமரம் – புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் உருண்டையான பழங்கள் இருக்கும். இது மிகவும் கசப்புத்தன்மை மற்றும் விஷத்தன்மை கொண்டது. அதைச் சாப்பிட்டு விட்டால் மரணமும் ஏற்படலாம்.
இருப்பினும் எட்டி மரத்தின் கொழுந்து இலைகளைப் பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு அத்துடன் வெள்ளைப் பூண்டு, மிளகு தலா 1௦ கிராம் எடுத்து அம்மியில் வைத்து நைத்து அதையும் போட்டு, ஒரு டம்ளர் அளவு நல்லெண்ணையை விட்டுக் கலக்கி அடுப்பில் வைத்துக் காய்ச்ச வேண்டும். இலை சிவந்த பின் இறக்கி ஆற வைத்து வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு, தினசரி இரண்டு தேக்கரண்டி எண்ணெயை உச்சியில் வைத்து அரை மணி நேரம் ஊறிய பின் சீகைக்காய் தேய்த்து வெந்நீரில் தலை முழுக வேண்டும். இது போலத் தொடர்ந்து ஏழு நாள் முழுகி வந்தால் போதும் விடாத ஒற்றைத் தலைவலி குணமாகும். பிறகு வரவே வராது.
எட்டி , எட்டியின் மருத்துவ குணங்கள், எட்டியின் பயன்கள் , எட்டியின் நன்மை, மருத்துவ குணம், பயன் , எட்டியின் நன்மைகள், எட்டியின் பயன்,
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.