2025க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் தனி குடிநீர் இணைப்பு- மத்திய அரசு இலக்கு

‘நம் நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் குழாயுடன் தனி குடிநீர் இணைப்பு வழங்கப்படும்’ என, மத்திய ஜல்ஜக்தி அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

நாடு முழுதும் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யும் விதமாக, ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019 முதல் செயல்படுத்தி வருகிறது. 2024 மார்ச் மாதத்திற்குள், கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், தனி குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மொத்தமுள்ள 19.36 கோடி வீடுகளில், இதுவரை 15.37 கோடி வீடுகளுக்கு மட்டுமே தனி இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் கூறுகையில், “நான்கு கோடி வீடுகளுக்கு தனி குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இந்த திட்டம் பூர்த்தியடையாமல் உள்ளதால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். ”பணிகள் நிறைவேற்றப்படாமல் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

இதுகுறித்து ஜல்சக்தி அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிராமப்புறங்களில் தனி குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை 10க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுமையாக நிறைவேற்றியுள்ளன. இருப்பினும், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் 60 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இங்கு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டிற்குள் இந்த பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத சூழலை உருவாக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தற்போது, 95 சதவீத கிராமப்பகுதிகளில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது. கழிப்பறை கட்டுமானம் மட்டுமின்றி திட – திரவக்கழிவு மேலாண்மை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. நாட்டில் உள்ள 5.87 லட்சம் கிராமங்களில், 5.61 லட்சம் கிராமங்கள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளன. இந்த திட்டத்தில் 93,947 கிராமங்களுடன் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மத்திய பிரதேசமும், மூன்றாவதாக மஹாராஷ்டிராவும் உள்ளன. கிராமப்புறங்களில், ‘அனைத்து வீடுகளிலும் கழிப்பறை’ என்ற திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும்.

அதேபோன்று, ‘ஸ்வச் பாரத்’ எனப்படும் துாய்மை இந்தியா திட்டம் கிராமப்புறங்களில் துவங்கப்பட்டதில் இருந்து, கடந்த 10 ஆண்டுகளில் 11.76 கோடிக்கும் மேற்பட்ட தனிநபர் வீட்டு கழிப்பறைகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...