வேளாண் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் க்ரிஷி கதா தளத்தை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் நேற்று  (28.06.2024) புதிய வலைதளம் ஒன்றை தொடங்கிவைத்தார். இத்துறையின் இணையமைச்சர் பாகீரத் சௌத்ரி மற்றும் நபார்டு வங்கித் தலைவர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். வேளாண் கட்டமைப்பு நிதியத்தின் கீழ், வழங்கப்படும் வட்டி சலுகைகளை வழங்ககோரி, வங்கிகள் அளிக்கும் கோரிக்கைகளுக்கு  தானியங்கி முறையில் விரைந்து தீர்வு காண ஏதுவாக மத்திய  வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையும். நபார்டு வங்கியும் இணைந்து புதிய வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.

வேளாண் விளைபொருட்கள் சேமிப்புத்திறனை அதிகரிப்பதன் மூலம். விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை குறைக்கும் நோக்கத்துடன், ஒரு லட்சம் கோடி ரூபாய் மூலதனத்துடன் வேளாண் கட்டமைப்பு நிதியம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிதியத்திற்கு இதுவரை 72 ஆயிரம்கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் திரட்டப்பட்டிருப்பதுடன்,  அதில் இதுவரை  67,871 திட்டங்களுக்காக 43 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்புதல்அளிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கு அதிகாரமளித்து, விழிப்புணர்வை

 

அதிகரித்து,   அறிவாற்றலை பகிர்ந்துகொள்வதுடன், ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.

புதிதாக தொடங்கப்பட்ட வலைதளம் மூலம், கடன் தொடர்பான கோரிக்கைகளுக்கு தானியங்கி முறையில் ஒரே நாளில் தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், வெளிப்படைத்

தன்மையை உறுதி செய்து ஊழல் நடைமுறைகளை தடுக்கவும், புதிய  வலைதளம் உதவும் எனவும் திரு சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...