பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்தார். கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், வீரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்திபூங்கா, முற்றிலும் தானியங்கி பால் பதப்படுத்துதல் மற்றும் கலன்களில் நிரப்பும் நிலையம் உள்ளிட்டவை இவற்றுள் அடங்கும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கால மாற்றத்துக்கு ஏற்ப உலகளவில் சிறந்த நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் . இந்த விஷயத்தில் கட்ச்பிரதேசத்தின் விவசாயிகளை அவர் பாராட்டினார். அவர்கள் தற்போது, பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். நமதுவிவசாயிகளின் புதுமையான வழிகள் மீதான ஆர்வத்தை இதுகாட்டுகிறது . அரசின் குறைந்தபட்ச தலையீட்டின் காரணமாக, கடந்த இருபது ஆண்டுகளாக, வேளாண்மை, பால்பண்ணை தொழில், மீன்வளம் ஆகிய துறைகளில் குஜராத் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. விவசாயிகளையும், கூட்டுறவு சங்கங்களையும் அதிகாரப்படுத்தியதை குஜராத் செய்துள்ளது.
வேளாண் சீர்திருத்தங்கள் குறித்து தவறான தகவல்களைக்கூறி விவசாயிகள் திசை திருப்பப்படுவதாக பிரதமர் குறை கூறினார். விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் பலஆண்டுகளாக கோரி வந்தவையே, விவசாய சீர்திருத்தங்களாக தற்போது வடிவம் பெற்றுள்ளன . மத்திய அரசு எப்போதும் விவசாயிகள் நலனில் அக்கறைசெலுத்தி வருவதாகவும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
புதுயுக தொழில்நுட்பம் மற்றும் புதுயுக பொருளாதாரத்தின் மூலம் கட்ச்மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். கெரேராவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா, மாண்ட்வியில் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம், அஞ்சாரில் உள்ள சார்ஹத் தெஹ்ரியில் புதியதானியங்கி நிலையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கட்ச் பகுதியின் வளர்ச்சி பயணத்தில் புதியமைல்கற்களை இவை உருவாக்கபோகிறது. இந்தத்திட்டங்களின் பயன்கள் இந்தப் பிராந்தியத்தின் பழங்குடியினர், விவசாயிகள், கால்நடைவளர்ப்போர் மற்றும் பொதுமக்களுக்கு போய்ச்சேரும் என்று அவர் கூறினார். இன்று கட்ச் நாட்டிலேயே வெகுவேகமாக வளரும் பிராந்தியங்களில் ஒன்றாக உள்ளது என அவர் குறிப்பிட்டார். இங்குள்ள இணைப்புவசதிகள் நாளுக்கு நாள் சிறப்படைந்து வருகிறது.
குஜராத் மக்கள் இரவு உணவின்போது மின்சாரம் இருக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வைத்தகாலம் ஒன்று இருந்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். குஜராத்தில் இன்று பெரும் மாற்றம் ஏறுபட்டுள்ளது . இன்றைய குஜராத் இளைஞர்கள், முந்தைய வசதியற்ற நாட்கள் பற்றி அறிந்திருக்கவில்லை . கட்ச்பகுதி மக்கள் தொகை எதிர்மறை வளர்ச்சியை கண்டிருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். இன்று, மக்கள் வெளியில் செல்வதை நிறுத்திவிட்டனர். வெளியில் சென்றவர்கள் திரும்பி வருவதால், மக்கள் தொகை பெருகிவருகிறது. பயங்கர நிலநடுக்கத்திற்கு பின்னர் கட்ச் பகுதி அடைந்துள்ள நான்குமடங்கு வளர்ச்சி குறித்து, ஆராய்ச்சியாளர்களும், பல்கலைக்கழகங்களும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
குஜராத் அரசு கடந்த இருபது ஆண்டுகளில், விவசாயிகளுக்கு உகந்த பலதிட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் புகழ்ந்துரைத்தார். சூரிய சக்தி திறனை வலுப்படுத்துவது குறித்த பணியில் குஜராத் முன்னோடிமாநிலமாக திகழ்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
21-ம் நூற்றாண்டில், எரிசக்தி பாதுகாப்பும், நீர் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானவை என பிரதமர் குறிப்பிட்டார். தண்ணீர் பற்றாக் குறையைப் போக்க கட்ச் பகுதிக்கு நர்மதை தண்ணீரைக் கொண்டுவருவது பற்றி முந்தைய காலங்களில் கேலி பேசியவர்கள் உண்டு என அவர் கூறினார். இன்று நர்மதை தண்ணீர் கட்சை வந்தடைந்துள்ளது, கட்ச் முன்னேறிவருகிறது என அவர் தெரிவித்தார்.
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |