மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் பர்தமன் மாவட்டத்தில் நட்டா சனிக்கிழமை தெரிவித்தது.
“கடந்தமுறை நான் வந்தபோது நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சியின் திட்டத்தின்படி தாக்குதலுக்குள்ளானோம். இதை நாடேபார்த்தது. மத்திய உள்துறை அமைச்சகம் இதை கவனத்தில் எடுத்து கொண்டது. இன்று நான் மீண்டும் வந்துள்ளேன். இதுவரை பயணம் நன்றாகஇருக்கிறது.
ஆளும் கட்சி குற்ற உள்ளுணர்வுடன் செயல்பட்டு வருகிறது. ஊழல் நிறுவனமயமாக்கப் பட்டுள்ளது. என்னைப் போன்ற பாதுகாவலர் மீதான தாக்குதல்தான் சாதாரண குடிமக்களுக்கான சட்டம் ஒழுங்கின் உண்மைநிலை” என்றார்.
கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்த பிரதமர் மோடியின் அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்பாரா என்று கேள்வி எழுப்பட்டது. இதற்குப் பதிலளித்தவர், ‘மம்தா என்ன செய்யப்போகிறார் என்று அவர் சார்பாக நான் எப்படி பதில்கூற முடியும். நல்ல எண்ணம் இருக்கும் என்று நினைக்கிறேன். மேற்குவங்க மக்களின் நலனைக் காட்டிலும் தனது ஈகோவிற்கு மம்தா முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.” என்றார்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |