நெல்லை தொகுதியின் அமமுக மற்றும் சமகவேட்பாளர்களின் வேட்புமனுக்கள் டிஸ்மிஸ் ஆனதை அடுத்து அந்ததொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக.,வினர் மற்றும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தாக்கல்செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நெல்லையில் போட்டியிடும் அம்மா மக்கள்முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பால்கண்ணனின் வேட்புமனுவை பரிசீலனை செய்தபோது அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். அவரது வேட்புமனுவை முன்மொழிந்தவர்களில் 3 பேர் அந்ததொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் இல்லை என்பதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிதெரிவித்தார்.
அதேபோல் மக்கள் நீதிமய்யம் கூட்டணியில் உள்ள சரத்குமார் கட்சியின் சமத்துவ மக்கள்முன்னேற்ற் கழகத்தின் வேட்பாளர் அழகேசன் என்பவரின் வேட்புமனுவையும் தள்ளுபடி செய்வதாக தேர்தல்அதிகாரி தெரிவித்தார். அவர் 10 நபர்களை முன்மொழிவு செய்வதற்குபதிலாக 8 நபர்களை மட்டுமே முன்மொழிந்தார் என்பதால் அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப் பட்டது.
இதனையடுத்து அந்ததொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அமமுக வேட்பாளர் பால்கண்ணன் தேவர் சமுதாய ஓட்டையும், சமத்துவ மக்கள்கட்சி வேட்பாளர் அழகேசன் நாடார் சமுதாய ஓட்டுகளையும் பிரிப்பார் என்ற நிலையில் அவர்கள் இருவரது வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால் தற்போது நயினார் நாகேந்திரன் வெற்றி உறுதி செய்யப் பட்டுள்ளது.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |