சோனியாவிற்கு ராகுலை பற்றியும், ஸ்டாலினுக்கு உதய நிதியை பற்றி மட்டுமே கவலை

காங்கிரஸ் ., தலைவர் சோனியாவிற்கு ராகுலை பற்றியும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உதய நிதியை பற்றியும் மட்டுமே கவலை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் கலிவரதனை ஆதரித்து தேர்தல்பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: திருக்கோவிலூரானது விஷ்ணுவின் அவதாரமான கோயிலும், சிவன்கோயிலும் ஒருசேர அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த இடம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான இந்த திருக்கோவிலூர் மண்ணை கையெடுத்து கும்பிட்டுக்கொள்கிறேன். ஏப். 6-ந்தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களான அதிமுக, பா.ஜ., பாமக வேட்பாளர்கள் மகத்தான வெற்றிபெற்று சாதனை படைப்பார்கள்.

இந்த தேர்தலானது தே.ஜ., கூட்டணிக்கும் ஊழல் கூட்டணியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நடக்கும்போட்டி. நான் இந்தநேரத்தில் எம்.ஜி.ஆரை பற்றி சொல்லியாகவேண்டும். அவர் மக்களின் உண்மையான தலைவராக விளங்கியவர். ஏழைமக்களுக்காக பணியாற்றியவர்கள் என நாடுமுழுவதும் ஒருவருக்கு பெருமையை கொடுக்க வேண்டும் என்றால் அது எம்.ஜி.ஆரையே சேரும். அதன்பிறகு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் வழியில் பின் தொடர்ந்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்துச் சென்றுள்ளார். ஜெயலலிதா, ஒருபெண்மணியாக எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர்.

தற்போது பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தமிழகத்தை வளர்ச்சிபாதையில் சிறப்பாக எடுத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள். நமக்கெல்லாம் திமுக, காங்கிரஸ் கூட்டணியை பற்றிதெரியும். லஞ்சம், ரவுடியிசம், நிலஅபகரிப்பு, குடும்பத்தின் வளர்ச்சி இவற்றை மட்டுமே செய்து கொண்டிருக் கிறார்கள். சமீபத்தில் கூட திமுக.,வை சேர்ந்த ஆ.ராசா, காலம்சென்ற பழனிசாமியின் தாயாரை பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார். தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இதுபோன்று தரக்குறைவான வார்த்தைகளை திமுக.,வினர் பேசி வருகிறார்கள்.

பெண்கள், தாய்மார்களை பற்றி அவதூறுபரப்பி வரும் திமுக, காங்., கூட்டணிக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும். தமிழகத்தில் ஸ்டாலின் ஊழலை பற்றி பேசுகிறார். 2ஜி அலைக்கற்றை மூலமும், டிவியின் மூலமும் என்னென்ன ஊழல்செய்தீர்கள் என்று திரும்பிப்பாருங்கள். திமுக என்பது ஒரு அரசியல்கட்சி அல்ல, அது ஒருவியாபார நிறுவனமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சோனியாவிற்கு ராகுலைபற்றியும், ஸ்டாலினுக்கு உதயநிதியை பற்றியும் மட்டுமேகவலை. இவர்கள் தங்களது பிள்ளைகளை பற்றித்தான் கவலைப்பட்டு கொள்கிறார்கள். ஆனால் மோடிக்கு தமிழ்மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பும், பாசமும் இருக்கிறது.

உலகமெங்கும் செல்லும் இடமெல்லாம் தமிழில் உள்ள திருக்குறளை மேற்கோள் காட்டியே அவர் பேசிவருகிறார். தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்டு கவலைப்படுவதில் மோடியை தவிர வேறு எந்த தலைவரும் கிடையாது. பிரதமர் மோடி தமிழகத்திற்கு நிறைய திட்டங்களை கொண்டுவந்துள்ளார். சமீபத்தில் வெளியான பட்ஜெட்டில் கூட சாலைமேம்பாட்டு பணிக்காக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்காக ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை வழித்தடங்களை செயல் படுத்தி வருகிறோம். மதுரை பகுதியின் விரிவாக்கத்திற்காக எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட நிறையதிட்டங்களை நாம் செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...