காங்கிரசின் கொரோனா அரசியல்;- நட்டா கடிதம்

கொரோனா பெருந்தொற்று விவகாரத்தில், காங்கிரஸ்கட்சி அரசியல்செய்து வருவதாக, அக்கட்சி தலைவர் சோனியாவுக்கு, பா.ஜ., தலைவர் நட்டா எழுதியகடிதத்தில் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் நட்டா கூறி உள்ளதாவது: உங்களது தலைமையில், உங்கள்கட்சி ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, மீண்டும் அதனையே அமல்படுத்தவேண்டும் எனக்கூறுவதை தவிர வேறு ஒன்றும் செய்வது கிடையாது. இரண்டாவது அலை குறித்த மத்திய அரசின் எச்சரிக்கைகளை புறக்கணித்து விட்டு, அது குறித்து எந்த தகவலும் வரவில்லை எனக்கூறி கேரளாவில் மிகப் பெரிய பேரணிகளை நடத்தி கொரோனா தொற்றை அதிகரிக்க செய்தீர்கள். போராட்டங்களை தூண்டி விட்ட பின்னர், கொரோனா விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என பேசுகிறீர்கள்.

இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவதுவங்கிய பின்னர், வட இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணமான கூட்டங்களில் உங்கள் கட்சி தலைவர்கள் காணப்பட்டனர். அங்கு அவர்கள் முகக் கவசம் அணியவில்லை. சமூக விலகலை கடைபிடிக்க வில்லை.

இரட்டை நிலை கடைபிடித்த ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் நடவடிக்கைகள் என்றும் நினைவில் கொள்ளப்படும். கொரோனாவுக்கு எதிராக இந்தியா தீவிரமுடன் போரிட்டுவரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மக்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்தவேண்டும். பொய்யாக பீதி ஏற்படுத்துவதையும், அரசியல் காரணங்களுக்காக தங்களது நிலைப்பாட்டை மாற்றுவதை நிறுத்தவேண்டும். மிகுந்த வேதனையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன். கொரோனா விவகாரதத்தில் காங்கிரஸ் அரசியல்செய்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்புமருந்தை குறை சொல்லி, மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் உருவான தடுப்பூசி, எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ சொந்தமானது அல்ல. அது நாட்டிற்கு சொந்தமானது. ஆனால், காங்கிரஸ்கட்சியால், தவறான அரசியலை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.பார்லிமென்டிற்கு புதியகட்டடம் கட்டுவதை எதிர்ப்பதற்காக அரசியலில் காங்கிரஸ் புது வழிகளை கையாண்டு வருகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் நட்டா கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...