பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் சந்திப்பு!

இன்றுகாலை (17/06/2021) சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து கார் மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையம்வந்தார். அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லிசென்ற தமிழக முதலமைச்சருக்கு அமைச்சர்கள், தி.மு.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.

அதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல் துறை மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் டெல்லி சிறப்புபிரதிநிதி, தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரை வரவேற்றனர்.

அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திரமோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/06/2021) மாலை 05.00 மணிக்கு சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உடனிருந்தார்.

இந்த சந்திப்பில், தமிழக வளர்ச்சித்திட்டங்கள், தமிழகத்திற்கு கூடுதல் கரோனா தடுப்பூசிகள், செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசித் தயாரிப்பதற்காக தடுப்பூசி உற்பத்தி மையத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது, நீட் தேர்வு, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள், மேகதாது அணை விவகாரம், கருப்புபூஞ்சை மருந்து, மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் உள்ளிட்டவைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாக தகவல் கூறுகின்றன.

பிரதமர் நரேந்திரமோடி- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே சந்திப்பு 25 நிமிடங்கள் நடைபெற்றது.தமிழக முதலமைச்சராக பதவியேற்றப்பின் முதன்முறையாக பிரதமர் நரேந்திரமோடியை மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

One response to “பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் சந்திப்பு!”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...