ஆரோக்கியத்துக்கான யோகா என்னும் கருப்பொருள் மக்களின் மன உறுதியை அதிகத்துள்ளது

பெருந்தொற்றுக்கு இடையே, இந்த ஆண்டின் சர்வதேசயோகா தினத்தின் –‘’ஆரோக்கியத்துக்கான யோகா’’ என்னும் கருப்பொருள் மக்களின் மனஉறுதியை அதிகத்துள்ளது நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ஒவ்வொருவரையும் வலிமைப் படுத்துவோம்

இந்தநெருக்கடியான காலகட்டத்தில் மக்கள் துவண்டு விடாமல் இருக்க வலிமையின் ஆதாரமாக யோகா திகழ்ந்தது நிரூபணமாகியுள்ளதாக . நாடுகளின் கலாச்சாரத்துடன் யோகாவுக்கு உள்ளார்ந்த பிணைப்பு இல்லாதநிலையில், பெருந்தொற்று காலத்தில் யோகா தினத்தை மறப்பது இயல்புதான் மாறாக, யோகாகுறித்த உற்சாகம் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் பெருந்தொற்றுக்கு எதிராக போரிடும் வலிமையையும், நம்பிக்கையையும் வளர்க்க மக்களுக்கு யோகா உதவியுள்ளது. கொரோனா முன்களவீரர்கள் எவ்வாறு யோகாவை தங்களது கவசமாகப் பயன்படுத்தி தங்களை வலுப்படுத்திக் கொண்டதுடன், தொற்றின்பாதிப்பை மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் எதிர்கொள்ள உதவினர் . நமது சுவாசமுறையை வலுப்படுத்த பிராணாயாமம், அனுலோம் விலோம் போன்ற மூச்சுப்பயிற்சிகளின் முக்கியத்துவத்தை நிபுணர்கள் வலியுறுத்துவதை அவர் நினைவுக்கூர்ந்தார்.

பெரும் தமிழ் துறவி திருவள்ளுவரின் நோய் நாடி என்னும் குறளை மேற்கோள் காட்டிய பிரதமர், நோயின் காரணத்தை அறிந்து அதனைக்குணப்படுத்த வேண்டும் . யோகாவின் நோயைக் குணமாக்கும் தன்மைகள் குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சி செய்யப்பட்டுவருவது . குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளின்போது யோகா செய்வதால், அவர்களது எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பது ஆராய்ச்சிகளில் தெரியவந்திருப்பதாக அவர் கூறினார். இது கொரோனாவுக்கு எதிராகப்போராட குழந்தைகளை தயாராக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யோகாவின் முழுமையான இயல்புபற்றி தெரிவித்த பிரதமர், அது உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் வலுப்படுத்துகிறது என்று கூறினார். நமது உள்வலிமையை உணர்ந்து நம்மை அனைத்து விதமான எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் யோகா விடுவித்து, பாதுகாக்கிறது. யோகாவின் நேர்மறையான விளைவுகளை விளக்கியபிரதமர், ” துன்பங்களில் இருந்து ஒருமைத்தன்மைக்கு மாற்றும் கருவி யோகா. ஒருமைத்தன்மையை உணர்ந்து கொள்தல் யோகா” என்று கூறினார். இது தொடர்பாக குருதேவ் ரபீந்திரநாத் தாகூரை மேற்கோள் காட்டிய அவர், ” நமது தனிமை என்பது கடவுளிடமிருந்தும், மற்றவர்களிடம் இருந்தும் நாம் விலகியிருப்பதை குறிக்கவில்லை. அது, யோகாவின் ஒற்றுமைபற்றிய முடிவற்ற உணர்வு” என்று கூறினார்.

இந்தியா நீண்ட நெடுங்காலமாக பின்பற்றி வரும்‘’ உலகமே ஒருகுடும்பம் ’’ என்னும் மந்திரத்துக்கு இப்போது உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். மனித குலத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம், நாம் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் பிரார்த்தித்து வருகிறோம். அந்தவகையில் யோகா முழுமையான ஆரோக்கியத்துக்கு வழிகாட்டுகிறது. ‘’ யோகா நமக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை வழங்குகிறது. யோகா தொடர்ந்து தனதுதடுப்பு வேலையை செய்வதுடன், மக்களின் ஆரோக்கியத்தில் ஆக்கபூர்வமான வகையில் பங்கெடுக்கிறது என்று நான்உறுதியாக நம்புகிறேன்’’ என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவும், உலகசுகாதார அமைப்பும் இன்று ஒருமுக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளதாக பிரதமர் அறிவித்தார். யோகா பயிற்சிகள் பற்றி பலமொழிகளில் காட்சிகள் மூலம் விளக்கும் எம்-யோகா செயலியை உலகம் பெற்றுள்ளது. நவீன தொழில் நுட்பம் மற்றும் பழமையான அறிவியலை இணைக்கும் மிகப்பெரிய உதாரணம் இது என்று கூறிய பிரதமர், உலகம் முழுவதும் எம்-யோகா செயலி, யோகாவை பரப்புவதுடன், ‘’ ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம்’’ என்பதற்கான முயற்சியைத்தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கீதையிலிருந்து மேற்கோள் காட்டிய பிரதமர், எல்லாவற்றுக்கும் யோகாவில் தீர்வு உள்ளது என்பதால், யோகாபயணத்தில் கூட்டாக நாம் நகர்வுகளை முன்னெடுப்பது அவசியமாகும் என்று வலியுறுத்தினார். யோகாவின் ஒருங்கிணைப்பு மற்றும் குண நலன்களுடன், யோகா அனைவரையும் சென்றடைவது மிகவும் முக்கியமாகும். யோகாவை ஒவ்வொருவரிடமும் எடுத்துச்செல்லும் பணியில் யோகா ஆசிரியர்களும், நாம் அனைவரும் பங்காற்றவேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கர்நாடகாவின் போர்ப்படை தளபதிய ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதியாகும் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநிலதேர்தல் ...

விளையாட்டுத் துறையை விளையாட்ட ...

விளையாட்டுத் துறையை  விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம் ''விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகா ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை; பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்ற பிரதமர்மோடி மாதவரா அருகில் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர்ச்சிக்காக முயற்சிப்போம் பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநிலம் பார்பேட்டாவில் ...

‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா ...

‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க முயற்சி ‘தவறான தகவ ல்கள் மூலம் ‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை ...

வடகிழக்கு மாநிலங்கள் அதிக தொகு ...

வடகிழக்கு மாநிலங்கள் அதிக தொகுதிகளில் களமிறங்கும் பாஜக மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும், நாகாலாந்தில் 20 தொகுதிகளிலும் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...