இலவச சிலிண்டர் திட்டம் 2.0… பிரதமர் தொடங்கி வைக்கிறார்!

நாட்டிலுள்ள வறுமை கோட்டுக்குகீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரி வாயு இணைப்புகளை வழங்குவதை இலக்காக கொண்டு மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டம் 2016ஆம் ஆண்டில் தொடங்க பட்டது. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, 2018 ஏப்ரல் மாதத்தில் கூடுதலாக ஏழுபிரிவுகளை (பட்டியலின/பட்டியல் பழங்குடி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தேயிலை தோட்டம், வனப் பகுதிகளில் வசிப்பவர்கள், தீவுகள்) சேர்ந்த பெண்களுக்கும் இந்தத்திட்டத்தின் பயன்கள் நீட்டிக்கப்பட்டது.

இத்திட்டத்துக்கான இலக்கும் 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளாக மாற்றியமைக்கப் பட்டது. இந்த இலக்கு 2019 ஆகஸ்ட் மாதத்திலேயே எட்டப்பட்டு விட்டது. 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், பிரதமரின் உஜ் வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒருகோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் முதற்கட்டத்தில் கொண்டு வரப்படாத குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒருகோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க அரசு திட்டமிட்டது.

அதன்படி, தற்போது உஜ்வாலா 2.0 திட்டம் தொடங்கப் படுகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி, உஜ்வாலா 2.0 திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைக்கிறார். பிற்பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவதோடு, நாட்டுமக்களுக்கும் உரையாற்றுவார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...