கிராமப்புற பகுதிகளில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு

கிராமப்புறப் பகுதிகளில் “அனைவருக்கும் வீடு” என்ற நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில், அடிப்படை வசதிகளுடன் கூடிய உறுதியான வீடுகளைக் கட்டுவதற்கு தகுதி வாய்ந்த கிராமப்புற குடும்பங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக, 2016 ஏப்ரல் 1 முதல் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆரம்ப இலக்கு என்பது 2016-17 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் 2.95 கோடி வீடுகளைக் கட்டுவதாகும். 2024-25 முதல் 2028-29 நிதியாண்டு வரை மேலும் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.   மத்திய அரசின் ஒப்புதலின்படி, இத்திட்டத்தின் கீழ் கூடுதல் தகுதியுள்ள ஊரகக் குடும்பங்களைக் கண்டறிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 17.09.2024 அன்று தொடங்கப்பட்ட ஆவாஸ்+ 2024 மொபைல் செயலி மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த செயலியில் முன் பதிவு செய்யப்பட்ட நில அளவையர்கள் மூலம் சுய ஆய்வு மற்றும் உதவி நில அளவை ஆகிய இரண்டிற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட சர்வேயர்களை அறிமுகப்படுத்துவதற்கான பயிலரங்குகள் நடந்து வருகின்றன, தற்போது வரை 26 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டம் செயல்படுத்துகின்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி இத்தகவலை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...