பிரதமரின் ‘அனைவருக்கும் வீட்டுவசதி’ திட்டத்தின் கீழ், மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்ட 4.51 லட்சம் வீடுகளை இன்று காணொலி முறையில் பிரதமர் நரேந்திரமோடி பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “இந்தவீடுகளில் மின்சாரம், குடிநீர் இணைப்பு, கழிப்பறை மற்றும் எரிவாயு இணைப்பு என அனைத்து வசதிகளும் இருக்கும். நாட்டில் சமூகபொருளாதார மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முக்கிய ஊடகமாக ‘அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம்’ மாறியுள்ளது.
3.5 கோடி குடும்பங்களின் கனவுகளை நிறைவேற்றியுள்ளது எங்கள் அரசின் பெரும் அதிர்ஷ்டம். கடந்த 8 ஆண்டுகளில் 3.5 கோடி குடும்பங்களுக்கு புதியவீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஏழைகள் மற்றும் வறுமைக்கோட்டில் வாழ்பவர்களின் நலனுக்காக மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. வீட்டுவசதி வாரியங்களுக்கு கட்டிடங்கள் கட்ட அரசின் மொத்த செலவு ரூ.22 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது” என தெரிவித்தார்.
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |