ஆலயங்களை பிடித்து அடுத்து நகையில் கை வைக்கும் திமுக

மிகபெரிய அநீதியும் வரலாற்றுகொடுமையும் தமிழக ஆலயங்களுக்கு நடக்கின்றன, நினைத்துபார்க்க முடியா கொடூரம் இது,நினைத்தாலே உடல் நடுங்கும் மிகபெரிய வஞ்சனை இது

அன்றொருநாள் சோமநாதபுரி ஆலயத்தை கொள்ளை அடித்த கஜினிக்கும், திருச்சி திருவரங்கம் தஞ்சை மதுரை என ரத்த முனையில் தங்கத்தை அள்ளிய மாலிக் காபூருக்கும், முகமது பின் துக்ளக்கும் இந்த தமிழக அரசுக்கும் வித்தியாசமில்லை

கோவில்களில் இருப்பவை மக்கள் காணிக்கையாக கொடுத்தவை, இதில்பயன்படா நகைகள் என எதுவும் எந்த வரையறையிலும் வாரா..

இந்த நகைகளெல்லாம் வரலாற்று பெட்டகங்கள், அதில் அக்கால மன்னர்நகை முதல் இன்றைய தங்க வகைகள் வரை உண்டு

ஒருவகையில் இவையெல்லாம் அக்கோவில்கள் போல் பெரும் வரலாறானவை. அதை தொட யாருக்கும் உரிமை இல்லை

இதை இப்படி சொன்னால் எளிதில் புரியும்

தமிழ்நாட்டில் ஆக பழமையான கலை பொக்கிஷங்கள் உண்டு, அவைஆலயங்களிலும் உண்டு. யாராவது இந்த பழம் ஆலயத்தை இடித்துவிட்டு புதிய ஆலயம் கட்டவேண்டும் என கிளம்பினால் விட முடியுமா?

பல்லாண்டு பழமையான சிலைகளை அழித்துவிட்டு நவீன பிளாஸ்டர் மண்ணில் சிலை வைப்போம் என்றால் விட்டுவிட முடியுமா?

முடியாதல்லவா? ஆனால் அந்த கொடுமையினைத்தான் இந்த அரசு செய்ய துணிந்திருக்கின்றது

இது எளிதில் விடமுடியா விஷயம், காரணம் மாபெரும் ஆபத்து அதில் ஒளிந்திருகின்றது

இன்று காலபெட்டகமான, இந்து ஆலயங்களின் கால கணாடியான நகைகளை உருக்குதல் என்பது அதன் அடையாளத்தை கால தொன்மையினை அழிக்கும் விஷயம்

இது இன்று தங்கத்தில் தொடங்கும், பின் கோவில் தூண்களுக்கு வரும், பின் கோபுரத்துக்கு வரும், பின் கருவறைக்கும் வரும்

இந்த சதியில்தான் தங்கத்தில் கைவைக்கின்றார்கள்

மற்ற நாடுகளெல்லாம் அரசனுக்கும் அரசிக்கும் தங்க தேர் பல்லக்கு நாற்காலி என செய்தபொழுது இந்த ஆன்மீக பூமிதான் தெய்வத்துக்கு நகையும் தங்கமும் கொடுத்து கொண்டாடியது

அதை தன் இஷ்ட தெய்வத்துக்கு சூட்டி அழகு பார்த்தது

அதனை வேண்டுதலாகவும் வைத்தது, அதில் சூட்சுமமும் இன்னும் பல விஷயங்களும் இருந்தன‌

கோவில் விக்ரஹம் என்பது சூட்சுமம் நிறைந்தது, மகாலட்சுமியின் வடிவமாக கருதபடும் தங்கம் அதில் பக்தனால் சூட்டபடும் பொழுது விஷேஷ சக்திகளை அது கொடுத்தது

இதனால்தான் இந்திய மன்னர்கள், இந்திய மக்கள் என்றில்லை முகமதியரும் ஆங்கிலேயருமே தங்க காணிக்கைகளை கொடுத்தனர்

இன்றும் மதுரை மீனாட்சி அம்மனுக்கு ஆங்கில கலெக்டர் கொடுத்த தங்க நகைகளும், காஞ்சி கோவிலில் ராபர்ட் கிளைவ் கொடுத்த மகர கண்டிகையும் உண்டு

பெரும் சிக்கலில் சிக்கிய அவர்கள் தாங்கள் நேர்ந்து கொண்டதால், அந்த தெய்வத்தின் அருளால் பிழைத்ததால் அந்த தங்க காணிக்கையினை செய்தார்கள்

இன்னும் ஏராளம் சொல்லலாம்

இந்த நகைகளை தொட எந்த அரசனுக்கும் உரிமை இல்லை, எந்த நிர்வாகிக்கும் உரிமை இல்லை

இந்து ஆலயம் என்றால் புகுந்து ஆடும் அரசு, மனசாட்சியும் தெய்வ சாட்சியுமின்றி ஆடும் அரசு, வேளாங்கண்ணி கோவில் நகைகள் பற்றி பேசுமா? ஒரு வார்த்தை சொல்லுமா?

மதசார்பற்ற அரசு என்றால் அதை செய்யவேண்டும் அல்லவா?

அதை செய்யாமல் இந்து கோவில் நகைகளை உருக்குவோம் என்பது, இந்து ஆலயங்களை அழிக்கும் திட்டத்தின் அடுத்த கட்டம்

முதலில் கோவில் நிலங்களை கைவைத்தார்கள், பின் வருமானத்தில் கைவைத்தார்கள், அர்ச்சகர் நிலையில் கால் வைத்தார்கள்

இப்பொழுது முக்கியமான நகைகளிலும் கை வைக்கின்றார்கள்

“செவ்வாழை தோட்டத்தில் குதித்தாடும்” குரங்குகள் போல அவர்களின் அட்டகாசம் எல்லை மீறி ஆடும் பொழுது பழைய சம்பவங்களைத்தான் சுட்டி காட்ட வேண்டும்

இந்திய ஆலயங்களின் தங்கத்தை தொட்ட யாரும் நிலைத்ததில்லை

கஜினியும், கோரியும், மாலிக்காபூரும், துக்ளக்கும் எவ்வளவோ டன் கணக்கு தங்கங்களை இந்து ஆலயங்களில் இருந்து எடுத்து உருக்கினர்

இதில் தப்பியது இன்று திருச்சி திருவரங்கத்தில் இருக்கும் அந்த அரங்கன் சிலை மட்டுமே, அதை மட்டும்தான் காடு காடாக சுற்றி அலைந்து சுமார் 50 வருடங்கள் அலைந்து அந்த இந்து சமூகம் காத்தது

அந்த சிலையினையும் தேடி அழித்து உருக்க சுல்தானிய படைகள் செய்த கொடுமை கொஞ்சமல்ல‌

ஆனால் இந்த கோவில் நகைகளை உருக்கி எடுத்து சென்ற மன்னர்கள் என்ன ஆனார்கள்? அவலமாய் அழிந்தார்கள்

அவர்களின் வாரிசு என்ன ஆனது?

இதோ கண்ணீரிலும் கம்பலையுமாக ரத்த வெள்ளத்தின் நடுவே ஒரு துண்டு ரொட்டிக்கு கையேந்தி நிற்கின்றது

இந்திய கோவில் தங்கத்தை எடுத்து சென்று வாழ்ந்துவிடலாம் என கணகிட்ட தேசமெல்லாம் இன்று தரித்திர கோலத்தில் கந்தலாகி நிற்கின்றது

அதை கண்டபின்னும் இந்து கோவில் நகைகளை தொடுகின்றார்கள் என்றால் அவர்களுக்கு பின்னாளில் நிகழவேண்டியது நிகழட்டும்

ஆனால் அதே நேரம் இந்து வரலாறு ஒரு நம்பிக்கையும் கொடுக்கின்றது

அன்று கஜினியால் சிதைக்கபட்ட சோமநாதபுரியும், மாலிக்காபூரால் துக்ளக்கால் சிதைக்கபட்ட திருச்சி, மதுரை ஆலயமெல்லாம் பின் உயர்ந்து நின்றன‌

ஆம் அதை அழித்தவர்கள்தான அழிந்தார்களே அன்றி அந்த ஆலயங்கள் எழும்பின‌

இன்றும் அதே பேரழிவு அதாவது மாலிக்காபூரும், துக்ளக்கும் செய்த அதே நகை கொள்ளை திராவிட அரசு எனும் பெயரில் செய்ய துணிந்துவிட்டது

ஆடட்டும், அவர்கள் ஆடும்வரை ஆடட்டும், ஆனால் ஆப்கானிஸ்தான் போல இவர்களுக்கும் ஒரு முடிவு உண்டு

ஒரு நாள் இந்த தர்மம் துலங்கும், இந்த ஆலயங்கள் இதைவிட பெரும் இடத்தை எட்டும், அங்கு பொன்னும் பொருளும் குவிந்து அது தன் இயல்பால் தன் நிலையினை மீட்டு கொள்ளும்

ஆனானபட்ட சமணரால், பவுத்தரால்,ஆப்கானியரால், பிரிட்டானியரால் அழிக்கமுடியா இந்த தர்மத்தையும் ஆலயத்தையும் இவர்கள் தொட்டு கூட பார்க்க முடியாது

அது விழ விழ தளைக்கும், அடிபட அடிபட எழும்பும், ஒரு டன் தங்கம் போனால் ஆது ஓராயிரம் டன் தங்கத்தை உருவாக்கும்

ஆடட்டும், இன்று ஆட்சியும் அதிகாரமும் இருக்கும் திமிரில் ஆடட்டும் அதை கண்ணீரோடு பார்ப்பதை தவிர யார் என்ன செய்ய முடியும்

ஆனால் வருங்காலம் இவர்களுக்கு மகா கொடியதாய் இருக்கும் என்பதை ஆப்கானை நோக்கி பெருமூச்சு விட்டு சொல்லி கொள்ளலாம்

மாலிக்காபூரின் மறுபிறப்புகள், துக்ளக்கின் திரும்பிய பிறவிகள் வந்தால் விஜயநகர பேரரசு எழும்பியது போல் வீரசிவாஜி போல் தர்மம் ஒரு சக்தியினை எழுப்பும் அல்லவா?

ஆம், எழும்பும் நிச்சயம் எழும்பும். தர்மம் எழ அதர்மம் மகா உச்ச கட்ட அநியாகங்களை கொடூரங்களை செய்ய வேண்டும் என்பது விதி

அது நடந்து கொண்டிருக்கின்றது, அவர்கள் தங்களால் முடிந்த எல்லா அக்கிரம கொடிய ஆட்டங்களையும் ஆடி தீர்க்கட்டும், கொடுக்கபட்ட காலம் வரை ஆடட்டும்

ஆனால் அதன் பின் எழமுடியா அளவு சரிவார்கள், சரிந்து புதைவார்கள் இது சத்தியம்

கீழடியில் கிடைத்த மண் சுவடுகளை பழம் பொருள் என பாதுகாப்பார்களாம், ஆனால் கோவிலில் இருக்கும் மகா பழமையான நகைகளை உருக்கி அழிப்பார்களாம்

  1. இதை எல்லாம் நினைக்கும் பொழுது நெஞ்சத்தின் அடி ஆழத்தில் இருந்து கண்ணீர் வராமல் என்ன செய்யும்?, இந்த கொடுமையில் கண்ணீருக்கு பதில் ரத்தமே வடிகின்றது.

நன்றி ஸ்டான்லி ராஜன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...