இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை

இதுவே திமுகவின் கடைசி ஆட்சிகாலம், இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நெல்லை மற்றும் சிவகாசியில் செய்தியாளர் களிடம் பேசும்போது திமுகவின் கடைசி ஆட்சிகாலம் இதுதான் என்று விமர்சித்தார். வரும்காலம் பாரதிய ஜனதா கட்சிக்கான காலம் என்றும் தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150 -வது பிறந்த நாள் விழா செப்டம்பர் 5ம்தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இதனை யொட்டி நெல்லை டவுணில் உள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை , மற்றும் நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் , மாநிலதுணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . இதனைத்தொடர்ந்து சிதம்பரனாரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மணிமண்டபத்திற்கு வெளிப்பகுதியில் கேக்வெட்டி அவரது படத்தை திறந்து வைத்தனர்.

இதனை அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், இது சரித்திர நாள் , சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சியின் 150 -வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. வ.உ.சிதம்பர பிள்ளை ஒருசாதாரண மனிதர் கிடையாது. பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் விட்ட ஒருசாதனை நாயகன் ஆவார் . இன்று அவர் புகழ் நாடுமுழுவதும் பரவி உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கொடுக்கமால் தமிழகஅரசு முரட்டு பிடிவாதமாக இருக்க காரணம் என்ன என்று தெரியவில்லை. பாரதிய ஜனதா தொண்டர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 முதல் 12 ந்தேதி வரை 3 நாட்கள் மாநிலம் முழுவதும் ஒருலட்சம் விநாயகர் சிலைகளை வீடுகள் முன் பிரதிஷ்டை செய்துவழிபாடு நடத்துவார்கள் .

இது தனிமனித உரிமை. இதனைத்தடுக்க யாருக்கும் அனுமதியில்லை . மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி போல் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கட்டுபாடுகளுடன் நடத்துவதற்கு அனுமதிக்கவேண்டும், ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு முதல்வர் , அமைச்சர்கள் அதிகாரிகள் முடிவு செய்யக் கூடாது ஜனநாயக முறையில் இதனை ஏற்றுகொள்ள முடியாது, இன்னும் காலம் கடக்கவில்லை, வழிபட நடத்த அனுமதிக்கலாம் .

உள்ளாட்சிதேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அவகாசம்கேட்டது தொடர்பாக நாளை தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது, அதில் பாஜகவும் கலந்துகொள்கிறது கூட்டத்தின் நிறைவுக்கு பின் இதுகுறித்து முடிவு செய்யப்படும் . மாநில அரசு பாரதியார், வ.உ.சி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிப்பதை பாஜக வரவேற்கிறது .

கொடநாடு விவகாரத்தை பொறுத்த வரை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச் சாமியை தேவையில்லாமல் சிக்க வைப்பதற்கான, தனிமனித தாக்குதல் நடந்து வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசியல் தலைவர்களை பொய்யாக வழக்குகளில் சேர்ப்பதை, பாரதிய ஜனதா வன்மையாக கண்டிக்கின்றது. இந்தவழக்கில் பாரபட்சம் இல்லாமல் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெறும். தமிழகத்தில் பாஜகவிற்கான இடம் உருவாகிவிட்டது. அடுத்து தமிழகத்தில் பாஜகவா, திமுகவா என்று யோசிக்கும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். அதிமுகவுடன் எந்த குழப்பமும் இல்லாமல் கூட்டணி செல்கின்றது. வரும்காலம் பாரதிய ஜனதா கட்சிக்கான காலம். இதுவே திமுகவின் கடைசி ஆட்சிகாலம். இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை என்றார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...