காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்திருப்பதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்மீதும், அதை கண்ணும் கருத்துமாக பேணிபாதுகாக்கும் நீதிமன்றங்கள் மீதும் பாஜக மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், இந்திய ஜனநாயகத்திற்கும், நம்நாட்டில் உள்ள நீதிமன்றங்கள்தான் மிகப் பெரிய நம்பிக்கையையும், உறுதிப் பாட்டையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.மாநில அரசின் உரிமைகளிலோ, ஆளுனரின் அதிகாரங்களிலோ, தமிழகஅரசைத் தவிர, நீதிமன்றங்களுக்கும் அல்லது மத்திய அரசுக்கும் எந்த குழப்பமும் இல்லை.

நீதிமன்றத் தீர்ப்பில், மத்தியஅரசுக்கோ, ஆளுனருக்கோ எந்த விதமான கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. மரணங்களில் அரசியல் செய்யும் மாநிலக்கட்சிகள் இதையும் அரசியலாக்க முயற்சிப்பதில் வியப்பில்லை. ஆனால் அதில் துளிகூட உண்மையில்லை என்பது மக்களுக்கு தெரியும்.

மத்தியிலும் மாநிலத்திலும் திமுகஆட்சியில் இருந்த போது கருணாநிதி, பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யவில்லை? கருணாநிதிக்கு பேரறிவாளன் விடுதலையில் உடன்பாடு இல்லையா? அல்லது கலைஞரை விட அரசியல் வித்தகம் மிக்கவர் என்று ஸ்டாலின் நினைக்கிறாரா?

பேரறிவாளனை உச்சநீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் 142ன்படி, தன் உச்சபட்சசிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. திமுகவை பொருத்தவரை காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியிருக்கும் இந்ததீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...