‛‛ இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்துபார்க்கிறது”
இளைஞர்களை வழி நடத்துவதற்காக, மடங்கள் பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன. புனிதமான மடங்களை ஆதி சங்கரர் நிறுவினார். சமுதாய நன்மைக்காக புதிய குறிக்கோளுடன் செயல் பட்டவர் ஆதிசங்கரர், கடவுள் சிவனின் அவதாரம். மனித நேயத்திற்காக அவர் தன்வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஆதிசங்கரரின் எண்ணங்கள் நமக்கு உத்வேகம்தருகிறது.
2013 ம் ஆண்டு சேதத்திற்கு பிறகு கேதார் நாத் மீண்டும் சீரமைக்கப்படுமா என மக்கள் நினைத்தார்கள். ஆனால், என்னுள் எழுந்தகுரல் ஓன்று, கேதார்நாத் மீண்டும் மறு கட்டமைக்கப்படும் என எப்போதும் சொல்லி கொண்டிருந்தது. டில்லியில் இருந்தவாறு, கேதார் மறு சீரமைப்பு பணிகளை தொடர்ச்சியாக ஆய்வுசெய்தேன். டுரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் மூலம் இங்கு நடக்கும் வளர்ச்சிபணிகளை ஆய்வு செய்தேன். கேதார்நாத்தை புத்துயிர் பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை வரும் தலைமுறையினரிடம் கொண்டுசெல்ல வேண்டும்
தீர்த்த யாத்திரை மூலம் நமது கலாசாரங்களை தெரிந்துகொள்ள முடியம். யாத்திரை மூலம் மகிழ்ச்சியுடன் பாரம்பரியமும் கிடைக்கிறது. கேதார்நாத் ஜோதிலிங்கத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கவேண்டும். இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது.
புத்த கயா உள்ளிட்ட ஆன்மிகதளங்கள் வெளிநாட்டு பயணிகள் ஈர்க்கின்றன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தி அதன் பெருமையை மீட்டெடுத்துள்ளது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் காரிடர் திட்டங்கள் வேகமாக செயல்பட்டு வருகிறது.
தற்போது நாடு அதிககுறிக்கோளை வைப்பதுடன், அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கப் படுகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ரூ.130 கோடி மதிப்பு வளர்ச்சிதிட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது:
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |