இந்திய இன பசு ரூ 40 கோடிக்கு விற்பனை : கின்னஸ் சாதனை

இந்தியாவின் நெலார் இனத்தை சேர்ந்த பசு மாடு, பிரேசில் நாட்டில் 40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கால்நடை என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

வெவ்வேறு விதமான சாதனைகளை கின்னஸ் உலக சாதனை புத்தகம் அங்கீகரிக்கிறது. அந்த வகையில், அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கால்நடை என்ற பெருமையை பிரேசில் நாட்டில் விற்கப்பட்ட பசுவுக்கு வழங்கியுள்ளது கின்னஸ் அமைப்பு.

‘வையாடினா 19’ என்று பெயர் சூட்டப்பட்ட இந்த பசுவின் வயது 53 மாதங்கள் மட்டுமே. இது, இந்தியாவில் ஓங்கோல் பகுதியை பூர்விகமாக கொண்ட நெலார் இனத்தை சேர்ந்த பசுவாகும். இதன் எடை 1101 கிலோ.

10-Feb-2025

பசு பராமரிப்பு தொகை உ.பி.,யில் அதிகரிப்பு
இது, பிரேசில் நாட்டின் மினாஸ் கெரைஸ் நகரில் ஏலத்தில் விடப்பட்டபோது, 40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்த பசு, அழகு ராணியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்காக நடத்தப்பட்ட அழகுப்போட்டியில், ‘மிஸ் சவுத் அமெரிக்கா’ என்ற பட்டத்தையும் இந்த பசு மாடு பெற்றுள்ளது.

எப்படி வந்தது பிரேசிலுக்கு

இந்தியாவின் ஓங்கோல் பகுதியில் மட்டுமே இருந்த நெலார் இன பசு மாடுகள், 1868ம் ஆண்டு கப்பல் மூலம் பிரேசில் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதாக, தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...