இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உடலை வெப்பமுடையதாகச் செய்யும். சிறுநீரைப் பெருக்கும். இதன் குணம் உடலுக்கு வன்மையைத் தரும். நீர்க்கட்டை உடைத்து நீரை வெளிப்படுத்தும் தன்மையுடையது. இதன் இலையைப் பச்சடி செய்து உண்ண மேற்கண்ட குணங்களைப் பெறலாம்.
இதன் விதையைப் பொடி செய்து, மருந்தாகப் பயன்படுத்தினால் உடலைத் தேற்றும், மலத்தை இலக்கி சரி செய்யும், காமத்தைப் பெருக்கும், வயதுக்கு வராத பெண்கள் வயதுக்கு வருவார்கள். குழந்தை பெற்றவர்கள் உண்டால் குழந்தைப் பால் பெருகும்.
இதை உண்டால் அஜீரணம், சீதபேதி, அஜீரணப்பேதி இடப்பாட்டி ஈரல் வீக்கம், வயிற்றுப் பொருமல், விக்கல், சரும ரோகம், கபநோய், குசுமரோகம் மூலம் ஆகியவற்றை நீக்கும்.
பால் சுரக்கவும், கருவைக் கரைக்கவும் சுக்கில விருத்திக்கும், தாராளமாய் மலத்தைத் தள்ளவும் உட்சூட்டை தணிக்கவும், உபயோகிக்கலாம்.
மேற்கூறப்பட்ட குணங்களைப் பெற 1 பங்கு விதைப் பொடிக்கு 20 பங்கு நீர் சேர்த்து குடிநீராக்கி அல்லது ஒரு பங்கு விதையைப் பொடிசெய்து 10 பங்கு குளிர்ந்த நீரில் நன்றாக ஊறவைத்து எடுத்து நீரை 15 மில்லி முதல் 30 மில்லி வரை நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொடுத்து வரலாம்.
விதையைப் பாலில் காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் சுரக்கும். ஆனால் இளங்கருவைக் கரைத்துவிடும். ஆனால் குழந்தை பிறந்தவுடன் கொடுக்க நலமுண்டாகும்.
விதையைப் பாலில் ஊறவைத்து, சர்க்கரை சேர்த்து லேகியம் செய்து கழற்சிக்காய் அளவு காலை, மாலை தினமும் உட்கொள்ள, வயிற்றுப்பொருமல் நீங்கும். பாலைச் சுரப்பிக்கும், சுக்கிலத்தைப் பெருக்கும்.
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.