என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளப் பட்டுள்ளது

அதிமுக குறித்து பாஜக சட்டப் பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு அதிமுக தலைமையிடம் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்ட பள்ளிமாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி தமிழ்நாடு பாஜகவினர் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,“சட்டப்பேரவையில் தைரியமாக முதுகெலும்புடனும், ஆண்மையுடனும் பேசக்கூடிய கட்சியாக அதிமுகவை நான் பார்க்கவில்லை. 4 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் மட்டுமே இருக்கும் நம்மால் பலத்தகுரலை எழுப்ப முடிவதில்லை” எனத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அதிமுகவினர் பலரும் அவரதுகருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வருத்தம்தெரிவித்துள்ளார். அதிமுக- பாஜக இடையே உள்ள அரசியல்உறவு சுமூகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இது குறித்து எந்தவித சர்ச்சையும் எழாமல் இருக்க கவனமுடன் செயல் படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இது குறித்து விளக்கமளித்த நயினார் நாகேந்திரன், “அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளப் பட்டுள்ளது. நான் கூறியகருத்துக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. போராட்டத்தின் மூலம் நீதிகிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரேஎண்ணம்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய அரசும் மாநில அரசும் இணக் ...

மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இறுக்க வேண்டும்- அரசியல் பேசும் ஆதினம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு ...

மஹாராஷ்டிரா முதல்வராக தேவேந்த ...

மஹாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ...

சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ...

சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலைப்பணிகல் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலையில் கர்நாடகாவிற்குள் அனைத்து ...

பேரிடர் நிவாரண நிதியை எப்போது த ...

பேரிடர் நிவாரண நிதியை எப்போது தருவீர்கள் என்ற MP கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் 'நிவாரணம் கிடையாது' என ராஜ்யசபாவில் மத்திய அரசு பதில் ...

நெத்தன்யாகுவுக்கு பிடிவாரண்ட் ...

நெத்தன்யாகுவுக்கு பிடிவாரண்ட் – ஜெய் சங்கர் விளக்கம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான பிடிவாரண்ட் குறித்து ...

இந்தியாவில் முதலீடு செய்வது லா ...

இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது – புதின் மாஸ்கோரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில், ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...