பிரதமர் நரேந்திரமோடியின் பணிவான துவக்கமும், அரசியல் புத்திசாலித்தனமும், துறவியைபோன்ற மன உறுதியும்தான் அவரது உயர்வுக்கு காரணம்’ என, பிரபல எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான, பிரிட்டனை சேர்ந்தவர் எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், 87. இவரதுதந்தை இந்திய சுதந்திரத்திற்கு முன், ஆங்கிலேய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றினார். எனவே, ரஸ்கின்பாண்ட் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து இங்கேயே வாழ்ந்துவருகிறார். ஆங்கில இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக திகழும் ரஸ்கின் பாண்ட், ‘எ லிட்டில் புக் ஆப் இந்தியா: செலிபிரேட்டிங் 75 இயர்ஸ் ஆப் இண்டிபெண்டன்ஸ்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் எழுதினார்.
இதை, ‘பெங்குவின்’ பதிப்பகம் வெளியிட்டு ள்ளது.இந்தபுத்தகத்தில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை அவர்களின் தனித்தன்மை குறித்து குறிப்பிட்டுள்ளார். ஜவஹர்லால் நேரு பற்றி குறிப்பிடுகையில், ‘நேருவின் மேடை பேச்சில், உலகவிஷயங்கள் குறித்த அவரது அறிவு மற்றும் ஆங்கில புலமை வெளிப்படும். அவர் மக்களுடன் உற்சாகமாக உரையாடுவதில் விருப்பம் கொண்டிருந்தார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி பற்றி குறிப்பிடுகையில், ‘மோடிக்கு இயற்கையிலேயே அரசியல் புத்திசாலித்தனம் உள்ளது. அவரதுபணிவான துவக்கமும், துறவியை போன்ற மன உறுதியுமே அவரை இரண்டுமுறை பிரதமராக்கி உள்ளது’ எனக்குறிப்பிட்டு உள்ளார்.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |