வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பு, அந்நாட்டின் இடைக்கால அரசுக்கு உள்ளது என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு உள்ளது. அக். 30ல் ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில் வங்கதேச தேசியக் கொடியை அவமதித்ததாக, ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற ஹிந்து அமைப்பின் தலைவரும், ‘இஸ்கான்’ எனப்படும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியுமான சின்மோய் கிருஷ்ண தாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரை விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், வழக்கறிஞர் கொல்லப்பட்டார். வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்தபடி உள்ளது. இந்த விவகாரம் குறித்து, பார்லி.,யில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ”வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களை இந்தியா தீவிரமாக கவனித்து வருகிறது. வங்கதேசத்தின் அனைத்து குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான முதன்மைப்பொறுப்பு, அந்நாட்டின் இடைக்கால அரசிடம் உள்ளது.
”டாக்காவில் உள்ள இந்திய துாதரகம், ஹிந்துக்களின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறது. கைது செய்யப்பட்ட ஹிந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் தொடர்பான வழக்கு விசாரணை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும்,” என்றார்.
இதற்கிடையே, தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சின்மோய் கிருஷ்ண தாஸ் உட்பட, 17 பேரின் வங்கிக் கணக்குகளை 30 நாட்களுக்கு முடக்க, வங்கதேச நிதி நுண்ணறிவு பிரிவு நேற்று உத்தரவிட்டது. சிறுபான்மையினர் விவகாரத்தில் இந்தியா இரட்டை வேடம் போடுவதாக வங்கதேச சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இரு நாட்களுக்கு நாடு தழுவிய போராட்டத்தை விஷ்வ ஹிந்துபரிஷத் அமைப்புஅறிவித்துள்ளது.
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |