மேலூரில் பாஜக முகவர்செய்ததில் தவறில்லை

மேலூரில் பாஜக முகவர்செய்ததில் தவறில்லை என்றும் ஹிஜாப்பை நீக்கசொல்வது நோக்கம் அல்ல என்றும் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிதேர்தல் நேற்று முன்தினம் ஒரேகட்டமாக நடைபெற்றது.அதன்படி,நடைபெற்ற வாக்குப்பதிவின் போது காலை மதுரை மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் அகற்றகூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதன் காரணமாக அந்த வாக்குசாவடியில் வாக்குப்பதிவு சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.

இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில்,பாஜக பிரமுகர் வெளியேற்றப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளதோடு,அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்,கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மேலூரில் பாஜக முகவர் செய்ததில் தவறில்லை என்றும் ஹிஜாப்பை நீக்கசொல்வது நோக்கம் அல்ல,மாறாக சாதாரண பெண்களைப் போல வரவேண்டும் என்பதே விருப்பம்,இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் பாஜகவின் முன்னாள்மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக,விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லவிழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:”மேலூரில் பாஜக முகவர்செய்ததில் எந்த தவறும் இல்லை.ஏனெனில்,ஹிஜாப்பை நீக்கசொல்வது நோக்கம் அல்ல,மாறாக சாதாரண பெண்களைப்போல வரவேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது.இதில் என்னதவறு இருக்கிறது?.

எந்த ஒருநபரும் முகத்தை மூடிக்கொண்டு சென்றால் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது நாளை வாக்கு எண்ணிக்கையின் போது முகத்திரை அணிந்து கொண்டு சென்றால் ஏற்றுக் கொள்வார்களா?.பாஜக முகவர் தன்னுடைய கடமையைதான் செய்திருக்கிறார்”,என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...