குற்றவியல் நடைமுறை மசோதா பதற வேண்டியது கொடுங்கோலர்கள்

குற்றவியல் நடைமுறை மசோதா 2022

மக்களவையில் மத்திய பாஜகஅரசால் நிறைவேற்ற பட்டுள்ளது.இதனைகடுமையாக எதிர்த்தது திமுக…

சரி அப்படி என்ன இந்தசட்டத்தில் சொல்றாங்கன்னா..

இதுவரை குற்றவாளிகளின் கைரேகை , கால்ரேகை, புகைப்படம் மட்டுமே வாங்கப்பட்டு வந்தது.புதிய சட்டத்தின்படி அவர்களின் ரத்தம், தலைமுடி, விந்து , உமிழ்நீர் போன்ற அனைத்து தரவுகளையும்சேகரிக்க போலீசாருக்கு அதிகாரம் உண்டு..

முக்கியமாக பெண்களுக்கு எதிராக பாலியல்கொடுமை செய்பவர்களின் அனைத்து மாதிரிகளையும் சேகரிக்க விசாரணை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது…

இந்ததரவுகள் நேஷனல் க்ரைம் ரெக்கார்ட்ஸ் பீரோவில் டிஜிட்டல் முறையில் 75 ஆண்டுகள்வரை சேகரிக்கப்படும்..எப்ப எல்லா மாநில காவல் துறையினருக்கு தேவைப்படுகிறதோ அந்த விசாரணையின் போது இந்த தரவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்..

வழக்கில் குற்றமற்றவர் என்று ஒருவர் நிரூபிக்கப் பட்டால் அவர் மாதிரிகளின் தரவுகளை அழிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது..

இதுலமெயின் அட்வான்டேஜ் என்னன்னா நாடுமுழுவதும் ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி குற்றம் புரிபவர்களை எளிதாக மடக்கிப்பிடித்து விடலாம்..

“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில்வரும் வழக்குகள் போன்றவை எல்லாம் இதுபோன்ற தேசிய அளவில் தரவுகள்சேகரிக்காமல் விட்டதால்தான் எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை..

இந்தமசோதாவைதான் இன்று தயாநிதி மாறன் எதிர்த்துள்ளார்..அதற்கு அவர்சொல்லும் காரணம்

” மத்திய அரசு மாநிலஅரசின் அதிகாரத்தை பறிக்கின்றது, அதிகாரம் உள்ளது என்பதால் எல்லையைதாண்டி நடக்காதீர்கள்.. மாநிலங்களின் உரிமைகளை பறிக்காதீர்கள்னு”

இதுல என்ன இவங்க உரிமை போகுதுனுதெரியல ..அதற்கு பதிலளித்த அமித்ஷா அவர்கள்

“இனி நாட்டின் எந்த ஒருபகுதியில் ஒருவன் கொடுஞ்செயல் புரிந்தாலும் , அவன் அந்த மாநில கட்டுப்பாட்டில் மட்டுமின்றி மத்திய அரசு உட்பட அவன் பிறமாநிலங்களின் கண்காணிப்பிலும் இருப்பான் என்பதுதான் இதன் முக்கிய அம்சமே..

இதில் எந்த மாநிலத்தின் உரிமையும் நாங்கள் பறிக்கவில்லை..

நிகழ்கால குற்றங்களுக்கு இந்த சட்டம் மிகமிக அவசியம் என்று கூறி அந்த மசோதாவை நிறைவேற்றினார் “

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...