முகமது நபி குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய பாஜகவின் முன்னாள் செய்திதொடர்பாளர் நூபுர் சர்மாவை ஆகஸ்ட் 10ம் தேதி வரை அவரை கைதுசெய்ய உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக 8 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தவழக்கு நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி பி பர்திவாலா ஆகியோர் அடங்கியஅமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நாடுமுழுவதும் பல இடங்களில் நூபுர் சர்மாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளதால், அனைத்து வழக்கையும் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று நூபுர்சர்மாவின் வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார். அடுத்த விசாரணையின் போது அனைத்து வழக்குகளையும் மாற்றுவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கலாம் எனத்தெரிகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்திதொடர்பாளர் நூபுர் சர்மா ஒரு தொலைக் காட்சி விவாதத்தின் போது முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து இஸ்லாமிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து நூபுர்சர்மா உச்ச நீதிமன்றத்தை நாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, தனக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களை ஒரேஇடத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால், உச்சநீதிமன்றம் இதை மறுத்ததோடு, உங்களுடைய வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கி விட்டது என உச்சநீதிமன்றம் மிக கடுமையாக சாடியது.
இன்றைய விசாரணையின் போது, நீதி மன்றத்தின் கருத்துக்களுக்குப் பிறகு நூபூரின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது என்று அவரதுவழக்கறிஞர் தெரிவித்தார். அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டியது வெட்டவெளிச்சமாகி உள்ளது. பாட்னா முதல் பாகிஸ்தான் வரை நூபுர் சர்மாவைவுக்கு கொலை மிரட்டல் வருகிறது. பாகிஸ்தானில் இருந்து ஒருவர் வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாட்னாவில் இருந்தும் சிலர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட இடத்திற்கே, மீதமுள்ள வழக்குகள் இணைக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, தண்டனைக்குரிய எந்தநடவடிக்கையும் எடுக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும் என நூபுர் சர்மாவின் வழக்கறிஞர் மன்வேந்திர சிங் வாதிட்டார்.
வெவ்வேறு மாநிலங்களில் பதியப்பட்ட வழக்குகளுக்காக ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் சென்றால் நுபுர் ஷர்மாவின் உயிருக்கு ஆபத்து என அவரின் வழக்கறிஞர் கூறினார். இது போன்ற சூழ்நிலையில் ஆபத்தும் அதிகரித்துள்ளதால், உச்சநீதிமன்றத்திடம் பாதுகாப்பு கோருகிறோம் என்று நூபுர் ஷர்மாவின் வழக்கறிஞர் கூறினார்.
அதன் பின்னர், நூபுர் சர்மா மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ள மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நூபுர் மீது பதிவு செய்யப் பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஏன் ஒரேஇடத்திற்கு மாற்றக்கூடாது என மாநிலங்கள் மற்றும் மத்திய அரசை நீதிமன்றம் கேட்டுள்ளது. இப்போது இந்தவழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறும்.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |