எதிற்கால இலக்குகள் சிறந்த உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்

கேரளாவின் பிரசித்திபெற்ற சிவகிரி மடத்தின் பொன் விழா ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. கேரளாவில் சமூக சீர்திருத்த வாதியாக திகழ்ந்தவர் ஸ்ரீநாராயண குரு. ஸ்ரீ நாராயண குருவின் ஒரேஜாதி, ஒரே மதம் ஒரே தெய்வம் என்ற கொள்கை கோட்பாடுகளை கொண்டவர். அனைத்துமதங்களின் கொள்கைகளையும், சமத்துவத்துடனும், சம மரியாதையுடனும் கற்பிக்கபடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

இவரது கருத்தை பரப்ப உருவாக்கப் பட்டதே சிவகிரி பிரம்ம வித்யாலயம். இங்கு நாராயண குருவின் படைப்புகள் மற்றும் இந்தியதத்துவம் குறித்த படிப்பு கற்பிக்கப்படுகிறது.இந்த மடத்தின் பொன் விழா ஆண்டை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட மடத்தின் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

பிரம்ம விதியாலயத்தின் பொன் விழாவையொட்டி ஓராண்டுகாலம் நடைபெறும் நிகழ்ச்சி கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காலை 10 மணிக்கு காணொளிகாட்சி மூலம் தொடங்கி வைத்து லோகோவையும் வெளியிட்டார். இந்தநிகழ்ச்சியில், ஸ்ரீ நாராயண அறக்கட்டளை தலைவர் சுவாமி சச்சிதானந்தா தலைமை தாங்கினார். வர்க்கலை சிவகிரி மடத்தில் சுவாமிகள், நிர்வாகிகள் , பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

90 ஆண்டுகால தீர்த்ததானம் மற்றும் பிரம்மவித்யாலயத்தின் பொன்விழா பயணம் என்பது ஒரு நிறுவனத்தின் பயணம் மட்டுமல்ல. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஊடகங்கள் மூலம் முன்னேறி வரும் இந்தியா என்ற எண்ணத்தின் அழியாப் பயணம் இதுவாகும். சுதந்திர இந்தியா தனது நூற்றாண்டு விழாவை அடுத்து 25 ஆண்டுகளில் கொண்டாடவுள்ள நிலையில் அதன் எதிற்காலஇலக்குகள் சிறந்த உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கவேண்டும் என கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.