இந்தியாவின் வளர்ச்சியால் உலகம்பயனடைகிறது என பிரதமர் மோடி டென்மார்க் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.
அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இன்று ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்தித்து இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து பேசினார்.
பின்னர் டென்மார்க் சென்றார் மோடி. அவருக்கு டென்மார்க் பிரதமர் மேட்பிரெட்ரிக்சன் வரவேற்றார். தொடந்து டென்மார்க் பிரதமர், இந்திய பிரதமர் இருவரும் டென்மார்க் வாழ் இந்தியர்களை சந்தித்தனர்.
பின்னர் டென்மார்க் பிரதமர் மேட் பிரெட்ரிக்சன் பேசியது, எனது நண்பர், பிரதமர் மோடி , டென்மார்க்கிற்கு உங்களை வரவேற்க முடிந்ததில் நான்மிகவும் பெருமைப்படுகிறேன். இன்று உங்களுடன் இருப்பதில் மிக்கமகிழ்ச்சி என்றார்.
தொடர்ந்து டென்மார்க்வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியது, இந்தியர்களான உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி. இதற்காக பிரதமர் மேட் பிரெட்ரிக்சனுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நமது அறிவியல் அறிவை உலகநாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம். தகவல் தொழில்நுட்ப துறையில் அபரிமிதமான வளர்ச்சியை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவின் வலிமையை தற்போது உலக நாடுகள் நன்றாக புரிந்துகொண்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சியால் உலகம்பயனடைகிறது. மொழிகள், உணவுகள் வேறாக இருப்பினும் நாம் இந்தியர்கள்தான். இந்தியர்களின் இன்டெர்நெட் டேட்டா பயன்பாடு அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |