நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை

“நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலான நிலக்கரி ஒதுக்கப் படுகிறது” என்று, மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்வதற்கு தவறியுள்ளது. ஆட்சிக்குவந்து ஓராண்டு கழிந்தும்கூட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வாய்திறக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 கொடுப்போம் என்றார்கள். ஆனால், அதுபற்றி எந்த இடத்திலும் வாய்திறப்பதில்லை.

திராவிடமாடல் ஆட்சி என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் பலகிராமங்களில் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. பலகிராமங்களில் தனித்தனி மயானங்கள் உள்ளன. இதுதான் திராவிட மாடல் அரசாக உள்ளது. ஏழைமக்கள் மீது நூறு சதவீதத்துக்கும் அதிகமான வரி உயர்வை திணித்துள்ளனர்.

நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங் களுக்கும், அவர்கள் கேட்பதை விட கூடுதலான நிலக்கரியை கொடுத்து கொண்டிருப்பதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் தெளிவாககூறியுள்ளார்.

சமையல் எரிவாயு விலையை பொறுத்த வரை சர்வதேச நிலைக்கு ஏற்ப ஏற்றம், இறக்கமாக உள்ளது. அரசின்மானியம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...