மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ., இப்போது கூண்டுக்கிளி அல்ல,” என, மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
மத்திய சட்டத் துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு கூறியுள்ளதாவது: அரசில்இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடும்போது விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்படும் சிரமம் என்னவென்பது எனக்கு தெரியும். கடந்த 2013ல் நிலக்கரி ஊழல் வெளிச் சத்துக்கு வந்தபோது, ‘சி.பி.ஐ., கூண்டுக்கிளி’ என உச்சநீதிமன்றமே விமர்சனம் செய்திருந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படிஇல்லை. நரேந்திர மோடி நம் பிரதமராக பதவி வகிக்கிறார். சிபிஐ., இப்போது சுதந்திரமாக செயல் படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘சி.பி.ஐ.,யின் நம்பகத்தன்மை பொது ஆய்வுக்கு உட்பட்டது. விசாரணை அமைப்புகள் அனைத்தையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவர வேண்டும்’ என கூறியிருந்தார்.
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |