ஆசிரியர் தினமானஇன்று (செப்டம்பர் 5, 2024) புதுதில்லியில்நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நாடு முழுவதும் உள்ளஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார்.
விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், கல்வியறிவுமட்டுமின்றி, உணர்வுபூர்வமான, நேர்மையான, தொழில்முனைவு மிக்கவர்களையும்ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வாழ்க்கையில் முன்னேறுவது வெற்றி, ஆனால் வாழ்க்கையின் அர்த்தம் மற்றவர்களின் நலனுக்காக உழைப்பதில் தான்உள்ளது என்று அவர் கூறினார். நாம் இரக்கம் காட்ட வேண்டும். நமது நடத்தைஒழுக்கமாக இருக்கவேண்டும். அர்த்தமுள்ள வாழ்க்கையில்தான் வெற்றிகரமான வாழ்க்கை அடங்கியுள்ளது. இந்தவிழுமியங்களை மாணவர்களுக்குக் கற்பிப்பது ஆசிரியர்களின் கடமை.
எந்தவொரு கல்வி முறையின் வெற்றியிலும், ஆசிரியர்கள் மிக முக்கிய பங்கு வகிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். கற்பித்தல் என்பது ஒரு வேலை மட்டுமல்ல. இது மனித வளர்ச்சியின் ஒரு புனிதமான பணி. ஒரு குழந்தை சரியாக செயல்பட முடியவில்லை என்றால், கல்வி முறைக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. ஆசிரியர்கள் பெரும்பாலும், தேர்வுகளில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு மட்டுமேசிறப்பு கவனம் செலுத்துவதை சுட்டிக்காட்டிய அவர். சிறந்த கல்வி செயல்திறன் என்பது, சிறப்பின் ஒரு பரிமாணம் மட்டுமே. ஒரு குழந்தை மிகச் சிறந்த விளையாட்டு வீரராக இருக்கலாம்; சில குழந்தைகளுக்கு தலைமைத்துவ திறன்கள் இருக்கலாம்; மற்றொரு குழந்தை சமூகநல நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்கிறது. ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையின் இயல்பான திறமையைக் கண்டறிந்து அதை வெளிக்கொணர வேண்டும்.
எந்தவொரு சமுதாயத்திலும் பெண்களின் நிலை என்பது அதன் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அளவுகோலாகும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். பெண்களின் கௌரவத்திற்கு ஏற்ப எப்போதும் நடந்து கொள்ளும் வகையில், குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார். பெண்களின் மரியாதை ‘வார்த்தைகளில்’ மட்டுமல்ல, ‘நடைமுறையிலும்’ இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் கூற்றுப்படி, ஒரு ஆசிரியர் தொடர்ந்து அறிவைப் பெறவில்லை என்றால், அவரால் உண்மையான அர்த்தத்தில் கற்பிக்க முடியாது என்று குடியரசுத் தலைவர் கூறினார். அனைத்து ஆசிரியர்களும் அறிவைப் பெறும் செயல்முறையைத் தொடர்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதைச் செய்வதன் மூலம், அவர்களின் கற்பித்தல் மிகவும் பொருத்தமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.
மாணவர்களின் தலைமுறை வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் என்று ஆசிரியர்களிடம் கூறிய குடியரசுத் தலைவர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உலகளாவிய மனநிலையையும் உலகத்தரம் வாய்ந்த திறன்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். சிறந்த ஆசிரியர்கள் ஒரு சிறந்த தேசத்தை உருவாக்குகிறார்கள் என்று கூறினார். வளர்ந்த மனநிலை கொண்ட ஆசிரியர்களால் மட்டுமே, வளர்ந்த தேசத்தை கட்டியெழுப்பும் குடிமக்களை உருவாக்க முடியும். மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம், நமது ஆசிரியர்கள் இந்தியாவை உலகின் அறிவுசார் மையமாக மாற்றுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |