இந்திய பொருளாதாரம் வேகமானவளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்ல மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களுக்கு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தியாவின் மின்சாரபகிர்மான துறையில் நஷ்டத்தின் அளவு இரட்டைஇலக்க அளவில் உள்ளது என நரேந்திர மோடி மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மட்டும் அல்லாமல் விரைவில் இதற்கு தீர்வுகாண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மின்சாரபகிர்மானம் அதாவது டிஸ்ட்ரிபியூஷன் துறையில் நஷ்டத்தின் அளவு இரட்டைஇலக்க அளவில் உள்ளது, ஆனால் வளர்ச்சி அடைந்தநாடுகள் அனைத்திலும் ஒற்றை இலக்கில்தான் உள்ளது என குறிப்பிட்டு மோடி பேசியுள்ளார்.
அப்படியென்றால் அதிகளவிலான மின்சாரம் வருமானம் ஈட்டமுடியாமல் வீணாகிறது. இதுமட்டும் அல்லாமல் தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை உற்பத்திசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
இந்தியாவில் பலமாநிலத்தில் மின்சார வாரியம் சுமார் 1 லட்சம்கோடி ரூபாய்க்கும் அதிகமான நிலுவை தொகையை வைத்துள்ளது. இந்ததொகை மாநில அரசுகள் மின்சாரம் உற்பத்திசெய்யும் நிறுவனங்களுக்கு அளிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்நிலையில் நிலுவைதொகை வைத்துள்ள அனைத்து மாநிலத்தின் மின்சார வாரியமும் விரைவில் செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைப்பதாக பிரதமர் மோடி கூறினார். மேலும மக்கள் தாங்கள் பயன் படுத்தும் மின்சாரத்திற்கு சரியாக பணம் செலுத்தியபோதும் ஏன் மாநில அரசுகளின் நிலுவை தொகை ஏன் தொடர்ந்து அதிகரிக்கிறது எனவும் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்தியாவில் மின்சார பகிர்மானம் மற்றும் மின்சாரதுறையின் ஆப்ரேஷன்ஸ் திறன் மற்றும் நிதியியல் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த 2021-22 முதல் 2025-26 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வரையிலான நிதிஉதவியை மோடி சனிக்கிழமை அறிவித்தார்.
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |