இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் ஒசாமு சுசுகி பெரும் பங்காற்றி உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
டில்லியில் இன்று (ஜன.,17) போக்குவரத்துக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இன்று முதல் ஜன.22 வரை 3 வெவ்வேறு இடங்களில் போக்குவரத்து கண்காட்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த கண்காட்சி நிகழ்ச்சியில் பல புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் கார்களின் தேவை அதிகரித்து வருகிறது.
ஒரு வருடத்தில் 2.5 கோடி கார்கள் விற்பனையாகி உள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் ஒசாமு சுசுகி பெரும் பங்காற்றி உள்ளனர். இந்த இரண்டு ஜாம்பவான்களும் இந்திய நடுத்தர வர்த்தகத்தினரின் வாகனத்துறையில் கனவை நனவாக்க பெரிதும் உதவி உள்ளனர்.
வளர்ச்சி அடைந்த தேசமாக மாற இந்தியா பயணம் மேற்கொண்டு வருகிறது. 25 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இன்றைய இந்தியா முழுக்க, முழுக்க இளைஞர்களின் ஆற்றலை கொண்டுள்ளது. இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறை 12 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவின்
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |