இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் துறை வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் மதிப்பு கொண்ட துறையாக உருவாகும் என பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். கிரேட்டர் நொய்டா பகுதியில் செமிகான் இந்தியா 2024 என்று தலைப்பில் செமிகண்டக்டர்கள் தொடர்பான 3 நாள் மாநாடு நடைபெறுகிறது. இதனை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது செமிகண்டக்டர் துறையில் இந்தியா எப்படி தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் போகிறது என்பது குறித்துஅவர் விரிவாக தெரிவித்தார். இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் சந்தையின் மதிப்பு 155 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இதனைஅதிகரிக்க இந்தியா செமிகண்டக்டர் உற்பத்தியில் மிகத் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
தற்போது வரையில் மத்திய அரசு 15 பில்லியன் அமெரிக்கடாலர்கள் அளவிலான செமிகண்டக்டர் முதலீடுகளுக்கு அனுமதி தந்துள்ளது. இதன் படி டாடா குழுமம் குஜராத் மாநிலத்தில் தனது முதல் மற்றும் நாட்டின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு ஆலையைநிறுவ இருக்கிறது. அதுமட்டுமின்றி அமெரிக்காவை சேர்ந்த மைக்ரான் டெக்னாலஜி நிறுவனம் குஜராத் மாநிலத்தில் 2.75 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் செமிகண்டக்டர் ஆலையை நிறுவுவதற்குவிருப்பம் தெரிவித்துள்ளது. கூடுதலாக இஸ்ரேலை சேர்ந்த டவர் செமிகண்டக்டர் நிறுவனம்கௌதம் அதானியுடன் இணைந்து மேற்கு இந்திய பகுதியில் 10 பில்லியன் டாலர்கள் முதலீட்டில்செமிகண்டக்டர் ஆலையை நிறுவுவதற்கு விருப்பம்தெரிவித்துள்ளது. கூடிய விரைவில் மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிஇந்த 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா சரியான நேரத்தில் செமிகண்டக்டர் பிரிவில் கால் பதித்து உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் துறை 500 பில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சி அடையும் என இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தவளர்ச்சியை எட்டும் போது நாட்டில் ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும்என கூறினார்.
பல்வேறு செமிகண்டக்டர் உற்பத்தியாளர்களை இந்தியா நோக்கி ஈர்ப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது அதற்காக இந்த நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கவும் அரசு முன்வந்துள்ளது என அவர் தெரிவித்தார். நொய்டாவில் நடைபெற்று வரும் செமிகண்டக்டர் தொடர்பான செமிகான் 2024 என்ற 3நாள் மாநாட்டில் செமிகண்டக்டர் துறையில் செயலாற்றும் நிறுவனங்களின் கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. தற்போது ஸ்மார்ட் போன்கள் முதல் மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரைசெமிகண்டக்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக நாடுகள் பெரும்பாலும் எலக்ட்ரானிக்ஸ்சாதனங்களுக்கு தேவையான சிப்களை பெறுவதற்கு சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகளையே நம்பி இருக்கின்றன. இந்த நிலையில் தான் சர்வதேச அளவில் சிப் தயாரிப்பு மையமாக இந்தியா உருவாகவேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு பல்வேறு நிறுவனங்களும் இந்த துறையில் முதலீடுசெய்வதற்கு ஊக்குவித்து வருகிறது.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |