பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், இந்தியப் பொருளாதார நிபுணருமான டாக்டர் பிபேக் தேப்ராய் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“டாக்டர் பிபேக் தேப்ராய் அவர்கள் மிகச் சிறந்த அறிஞர் பொருளாதாரம், வரலாறு, கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம் உள்ளிட்ட பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். தமது படைப்புகள் மூலம், அவர் இந்தியாவின் அறிவுத் துறையில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். பொதுக் கொள்கையக்கு பங்களிப்பு செய்ததோடு மட்டும் அல்லாமல் நமது பண்டைய உரைகள் மற்றும் நூல்களை ஆராய்வதிலும் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவற்றை இளைஞர்கள் அணுகக்கூடியதாகவும் ஆக்கினார்.”
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |