ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுதோறும் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும்

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுதோறும் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் 75 ஆவது சுதந்திரநாள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்தவகையில் 75 ஆவது சதந்திர நாளை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்தியஅரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துவருகிறது.

அதன்படி, ஹர் கர் ட்ரையாங்கா இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வீடுகளிலும் தேசியகொடியை ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுதந்திரநாளை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தஆண்டும் நாம் அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்துவரும் நிலையில், அதை ஹர் ஹார் ட்ரையாங்கா(ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) இயக்கம் மூலம் மேலும் வலுப்படுத்துவோம்.

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நாட்டுமக்கள் ஊங்கள் வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிடுங்கள். இந்த இயக்கம் தேசியக்கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்று, ஜூலை 22 நமது வரலாற்றில் ஒருசிறப்பான நாள். 1947 ஆம் ஆண்டு இதே நாளில்தான் நமது தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நமது மூவர்ணக்கொடி மற்றும் பண்டிட் நேருவால் ஏற்றப்பட்ட முதல் மூவர்ணக் கொடியுடன் தொடர்புடைய குழுவின் விவரங்கள் உள்பட வரலாற்றில் இருந்து சிலசுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...