ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை

பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன்படி ஆவணபட வீடியோக்கள், கருத்துகளை நீக்க சமூக வலைதளங்களுக்கு மத்தியஅரசு உத்தரவிட்டிருக்கிறது. இதை ட்விட்டர், யூடியூப் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு வீடியோ, பதிவுகளை நீக்கி வருகின்றன.

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்தமாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்தகலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா – மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்தஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிபிசியின் ஆவண படத்தை யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட மத்திய அரசு கடந்த 18-ம் தேதி தடை விதித்தது. இந்த சூழலில் பிபிசி ஆவண படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அதோடு பிபிசி ஆவண படத்துக்கான இணைப்பும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. இத்தகைய சமூக வலைதள பதிவுகளுக்கு மத்திய அரசு தற்போது தடைவிதித்துள்ளது. ட்விட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் அரசின் உத்தரவை ஏற்று வீடியோக்கள், பதிவுகளை நீக்கிவருகின்றன. ட்விட்டரில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிபிசி ஆவணபடம் வெளியாக ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஆவணபடம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. இவை நாட்டின் ஒருமைப் பாட்டை சீர்குலைக்கும் வகையில் உள்ளன.

எனவே ஆவணபடம் தொடர்பான கருத்துகளை நீக்க யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கண்டிப்புடன் உத்தரவிடப் பட்டு இருக்கிறது. பிபிசி ஆவண படத்துக்கான இணைப்புகளை நீக்கவும் அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவண படத்தின் 2-ம் பாகம் வரும் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி, பிரதமர் மோடி உட்பட வெளிநாட்டு தலைவர்கள் குறித்து ஆவண படம் வெளியிட தேவையில்லை. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் உட்பட சொந்த நாட்டின் தலைவர்கள் குறித்த ஆவண படங்களை வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நடுநிலையாளர்கள் விமர்சித்து உள்ளனர்.

பி.பி.சி-ஐத் தாக்கிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்தியாவில் உள்ள ஒவ்வொருசமூகமும் பிரதமர் மோடியின் தலைமையில் முன்னேறி வருவதாக கூறினார். “சிறுபான்மையினர், அல்லது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சமூகமும் நேர்மறையாக முன்னேறி வருகிறது. இந்தியாவிற்குள்ளும் வெளியிலும் தொடங்கப் படும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களால் இந்தியாவின் பிம்பத்தை இழிவுபடுத்தமுடியாது. பிரதமர் நரேந்திர மோடி (@narendramodi) ஜியின் குரல் 1.4 பில்லியன் இந்தியர்களின் குரல்” என்று அவர் சனிக்கிழமை ட்விட்டரில் எழுதினார்.

மும்பை பா.ஜ.க தலைவர் ஆஷிஷ் ஷெலர், பி.பி.சி மூலம் மோடியை அவதூறாகப்பேச முயற்சிகள் நடப்பதாக கூறியிருந்தார். “ஏற்கனவே உலக அளவில் பாராட்டைப்பெற்றுள்ள நமது பிரதமரைப் பற்றிய இத்தகைய ஆவணப்படத்தை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்,” குஜராத்தில் அவர் முதலமைச்சராக இருந்தபோது நடந்த வகுப்புவாதகலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இரண்டு தசாப்தங்களாக அவதூறு செய்து வந்தன,”

“எதிர்க்கட்சிகள் விழுந்து விட்டது… இப்போது, ​​பி.பி.சி மூலம் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறு செய்ய முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றன,” என்று அவர் கூறினார்.‛‛குஜராத் கலவரம் தொடர்பான இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் எந்தபகுதியில் அநீதி நடந்தாலும் அதை தட்டிக் கேட்போம். ஆனால் மரியாதைக்குரிய ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது. இதனை நான் ஒப்புக்கொள்ளவில்லை” என்றார். இதன்மூலம் பிரதமர் மோடிக்கு ஆதரவாக ரிஷி சுனக் பேசியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ப.ஜ.க உறுப்பினர் சேர்க்கை மேட்ட ...

ப.ஜ.க உறுப்பினர் சேர்க்கை மேட்டுப்பாளையத்தில் L.முருகன் தொடங்கிவைத்தார் மேட்டுப்பாளையம்: பா.ஜ.,வின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான 'சங்கதன் பர்வா,சதாஸ்யத ...

சைபர் குற்றங்களை தடுத்திட கூடு ...

சைபர் குற்றங்களை தடுத்திட கூடுதல் கமாண்டோக்கள் இலக்கு -அமித் ஷா சைபர் குற்றங்களை தடுத்திட 5 ஆயிரம் சைபர் கமாண்டோக்களை ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் -குடியரசுத்துணைத்தலைவர் நமது வாழ்வில் குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...