2024-25 -ம் ஆண்டு பட்ஜெட் -அமித் ஷா பாராட்டு

2024-25-ம் ஆண்டு மத்திய பட்ஜெட், மக்கள் நலனையும், வளர்ச்சியையும் அடிப்படையாக கொண்டுள்ளதென மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.  நாட்டு மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற மோடி அரசின் உறுதிபாட்டை இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

தொலைநோக்குப்பார்வை கொண்ட இந்த பட்ஜெட்டுக்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை இந்த பட்ஜெட் எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட், மகளிர் சக்தியின் துணிச்சலுக்கும், வலிமைக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் துறை உற்பத்திக்கு ஊக்கமளிக்க 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, புதிய நல்வாய்ப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். தேசிய கூட்டுறவு கொள்கை, கூட்டுறவு இயக்கத்திற்கு அதிகாரமளித்து, அதன் வலிமையை  கடைக்கோடி அளவிற்கு சென்றடையச் செய்யும் என்று தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட் ஒதுக்கீடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு புதிய சக்தியை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோத ...

மோடி அரசு பயங்கரவாதத்தை  ஒருபோதும் சகித்துக்கொள்ளாது – அமித்ஷா இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இ ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத் ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் ம ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பிரச்சனைகளை பேச வேண்டும் – அண்ணாமலை காட்டம் 'தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என்று தி.மு.க., நாடகம் நடத்துகிறது. ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேர ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேரம் – அண்ணாமலை ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – அமித்ஷா '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...