கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மகளிருக்கான கோ கோ உலகக்கோப்பை போட்டி முதல்முறையாக நடத்தப்பட்டது. டில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. குரூப் ஸ்டேஜ் ஆட்டங்களில் தென்கொரியா, ஈரான் மற்றும் மலேசியா அணிகளை தோற்கடித்த இந்திய அணி காலிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தியது. அதன்பிறகு, தென்னாப்ரிக்காவை அரையிறுதியில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆரம்ப முதலே இந்திய வீராங்கனைகள் ஆட்டத்தில் அனல் பறக்க விட்டனர். இதனால், இந்திய அணிக்கு புள்ளிகளுக்கு புள்ளிகள் கிடைத்தது. இறுதியில், 78-40 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று, முதல்முறையாக மகுடத்தை சூடியது.

சாம்பியன் பட்டத்தை வென்ற மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், ‘அசாத்திய திறமை, உறுதி மற்றும் குழுவாக செயல்பட்டு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள். இந்தியாவின் பழமையான பாரம்பரிய விளையாட்டை, இந்த வெற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.நாட்டில் உள்ள கணக்கிட முடியாத இளம் விளையாட்டு வீரர்களுக்கு இது உந்துதலாக இருக்கும்’, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, ஆண்களுக்கான முதல் கோ கோ உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி, நேபாளத்தை 54-36 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...