தேசமே பிரதானம், தேச பக்தியே ஆதாரம்

இன்னும் சில நாட்களில் இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்நன்னாளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அமிர்த பெருவிழாவாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் இருந்து, 15ஆம் தேதி வரை ஒவ்வொரு இல்லங்களிலும் தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடிதனை ஏற்றி மக்கள் கொண்டாட வேண்டும், என்று கேட்டுக் கொண்டும் உள்ளார்

நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதற்கொண்டே இது நடந்திருக்க வேண்டும். ஏனோ இதற்கு 75 வருடம் பிடித்திருக்கிறது. ஏனென்றால் இந்த சுதந்திரதனை பெறத்தான் எண்ணிலடங்காதோர் ரத்தம் சிந்தினர், உயிர் தியாகம் செய்தனர், பலர் சிறை பட்டனர், அதில் சிலர் சிறையிலேயே மாண்டனர்,

இந்த சுதந்திரக் கொடியை ஏற்றத்தான் மகாத்மா காந்தி அகிம்சை வழிப் போராட்டங்களை கண்டார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆயுதங்களுடன் ஆங்கிலேயனின் நெஞ்சை பிழந்தார். இந்தக் கொடி தனை ஏந்தியதால்தான் வ உ சிதம்பரம் பிள்ளை தனது பெரும் செல்வத்தை இழந்தார், திருப்பூர் குமரன் ஆங்கிலேயனால் கொல்லப்பட்டார்.

இத்தகைய பெருமை மிகு தேசியக் கொடிதனை நம் இல்லங்களில் ஏற்றுவது நமது கடமை. இந்த சுதந்திரத்தினை பாடுபட்டுத் தேடித் தந்தவர்களுக்கு நாம் செய்யும் பெருமையம் கூட. இன்று இந்தியா முதல்முறையாக காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 20 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடியுடன் சுதந்திரத்தை கொண்டாட இருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் முன்புமுன்பு ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் கொண்டாடப்பட்ட தேசியக்கொடி நிகழ்வு இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது குழந்தைகளின் கைகளில் ஏந்தி செல்லும் படங்கள் பல காணக்கிடைக்கிறது

இதுதான் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறும் புதிய இந்தியா. தேசமே பிரதானம், தேச பக்தியே ஆதாரம் என்று தனது செயலின் மூலம் முழங்கும் இந்தியா.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...