ஜனநாயகத்தின் தாய் இந்தியா

சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி 5 உறுதிமொழிகளைப் பட்டியலிட்ட்டார். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிகமுக்கியமான காலகட்டம் என்று கூறிய பிரதமர் மோடி அந்த 5 உறுதிமொழிகளையும் பட்டியலிட்டார்.

“ஜனநாயகத்தின் தாய் இந்தியா. இந்தியதேசம் கடந்த 75 ஆண்டுகள் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளது. நாம் பல சாதனைகளை கண்டுள்ளோம். அதே வேளையில் இயற்கை பேரிடர், போர் எனப் பலசறுக்கல்களையும் எதிர்கொண்டுள்ளோம். நம் நாட்டின் வேற்றுமையிலும் ஒற்றுமைகாணும் தன்மையே நம்மை வழிநடத்தும் சக்தியாக இருந்துள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி வீடு தோறும் தேசிய கொடி ஏற்றவேண்டும் என்று கோரினேன். அதற்கு நல்லவரவேற்பு கிடைத்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் பெருமையை கொண்டாடத் திரண்டுள்ளனர்”

“நம்நாடு இன்னும் 25 ஆண்டுகளில் வளர்ந்த தேசமாக இருக்கும். அதற்கு நாம் ஐந்து உறுதி மொழிகளை ஏற்கவேண்டும். முதலாவது நாம் பெரிய இலக்குகளுடன் முன்னேறிச்செல்ல வேண்டும். அந்த இலக்கு இந்தியாவை வளர்ந்த தேசமாக்குவது. இரண்டாவது உறுதிமொழி, எல்லாவகையான அடிமைத் தனத்தையும் வேரறுக்கவேண்டும். மூன்றாவது நமது பாரம்பரியத்தை நினைத்து எப்போதும் பெருமிதம்கொள்ள வேண்டும். நான்காவதாக, ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றுக்கொள்வோம். கடைசியாக நாம் ஏற்கவேண்டிய ஐந்தாவது உறுதிமொழி குடிமகனின் கடமைகளை ஆற்றுவது. முதல்வர்களுக்கும், பிரதமருக்கும் கடமை இருக்கிறது” என்று பிரதமர் மோடி பட்டியலிட்டார்.

இந்த 5 உறுதிமொழிகளையும் ஏற்று நாட்டுமக்கள் பின்பற்றினால் இந்தியாவை இன்னும் 25 ஆண்டுகளில் வளர்ந்தநாடாக மாற்றமுடியும். நம் விடுதலை வீரர்களின் கனவு நிறைவேறும் என்று பிரதமர் மோடி கூறினார்.

 முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். முன்னதாக பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை வருகைதந்த அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் வரவேற்றார். பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்று விழா மேடைக்கு சென்றார்.

சரியாக 7.30 மணிக்கு பிரதமர் தேசியக்கொடியை ஏற்றினார். தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் 4 ஹெலிகாப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்னர் சாரே ஜஹான் சே அச்சா பாடல் முழங்க வீரர்கள் பரேட் நடத்தினர். அதன் பின்னர் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...