ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது : மங்கீ பாரத் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்

”நம் நாட்டின் தேர்தல் நடைமுறைகள் குறித்து சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். ஒவ்வொரு முறையும் அந்த சந்தேகம் தவறு என்பதை நம் ஜனநாயகம் நிரூபித்து வருகிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, ‘மன் கீ பாத்’ எனப்படும் மனதில் குரல் ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே கலந்துரையாடுகிறார்.

அதன்படி, இந்த ஆண்டின் முதல் ரேடியோ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. அதில், அவர் கூறியுள்ளதாவது:

வழக்கமாக கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, இப்போது ஒலிபரப்பாவது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை நமக்கெல்லாம் மிகவும் முக்கியமான நாள்.

நாட்டின் குடியரசு தினத்தை கொண்டாட உள்ளோம். அதனால், இந்த நிகழ்ச்சி முன்னதாகவே ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு குடியரசு தினம் நமக்கெல்லாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குடியரசின் 75வது ஆண்டை நாம் கொண்டாட உள்ளோம்.

நம் நாடு குடியரசு அந்தஸ்து பெற்றது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கப்பட்டதன் 75வது ஆண்டைக் கொண்டாடுகிறோம்.

இந்த நேரத்தில், பார்லிமென்டின் நிர்ணய சபையில் பணியாற்றிய அம்பேத்கர், ஜனாதிபதியாக பணியாற்றிய ராஜேந்திர பிரசாத், ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் பங்களிப்பை நினைத்து பார்க்க வேண்டும்.

குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான, ஜன., 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாகும். இந்த நாளில்தான் நம் தேர்தல் கமிஷன் உருவாக்கப்பட்டது.

தேர்தல் நடைமுறைகளில் தொடர்ந்து மாற்றங்களையும், முன்னேற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செய்து வரும் தேர்தல் கமிஷனுக்கு பாராட்டுகள்.

நம் தேர்தல் நடைமுறைகள் குறித்து சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இந்த சந்தேகங்கள் அனைத்தும் தவறு என்பதை நம் ஜனநாயகமும், தேர்தல் கமிஷனும் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. ஏனென்றால், ஜனநாயகத்தின் தாயகம் நம் நாடு தான். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு க ...

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்த ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சி பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உய ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது ? அண்ணாமலை கேள்வி 7,360 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என்று ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ் ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ்த்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி; உலகெங்கும் உள்ள தமிழ் ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றா ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றாவது இடம் – பிரதமர் மோடி உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...