உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தின் தாய் -பிரதமர் மோடி பெருமிதம்

‘உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தின் தாய். தேச நலனுக்காக நீதிமன்றங்கள் செயல்படுகிறது’ என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

டில்லியில் நீதித்துறைக்கான தேசிய மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டை இன்று (ஆகஸ்ட் 31) பிரதமர் மோடி துவக்கி வைத்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், கபில் சிபல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: நீதிமன்றங்கள் தேச நலனுக்காக செயல்பட்டு வருகிறது. நீதித்துறை மற்றும் உச்சநீதிமன்றம் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியர்கள் ஒருபோதும் நீதித்துறை மீதோ, நீதிமன்றங்கள் மீதோ சந்தேகம் எழுப்பியதில்லை.

சுப்ரீம் கோர்ட்டின் 75 ஆண்டுகள் என்பது ஒரு நிறுவனத்தின் பயணம் அல்ல; இந்திய அரசியலமைப்பு மற்றும் மதிப்பின் பயணம். உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தின் தாய். இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்துகிறது. நெருக்கடி நிலையின் இருண்ட காலத்திலும் உச்ச நீதிமன்றம் எங்கள் அடிப்படை உரிமைகளை உறுதி செய்தது.

எப்போதும் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தது. நீதித்துறையில் மாவட்ட நீதித்துறை என்பது முக்கியமான தூணாக விளங்குகிறது. நமது குற்றவியல் சட்டங்கள் காலனித்துவ சிந்தனையிலிருந்து விடுவிக்க வழிவகை செய்தது. புதிய சட்டங்கள் மக்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கும்.

மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 4.5 கோடி வழக்குகளை தீர்க்க வழிவகை ஆராயப்படுகிறது. 10 ஆண்டுகளில் நீதித்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு ரூ.8 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. புதிய கிரிமினல் சட்டங்கள் குடிமக்கள், நீதித்துறைக்கு முன்னுரிமை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகளை மையமாக கொண்டு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் சமூகத்திற்கு மிகவும் கவலையளிப்பவையாக உள்ளன.இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...