தி.மு.க., சிறுபான்மை யினருக்கு எந்த நலத்திட்டதையும் செயல் படுத்தவில்லை

தி.மு.க., ஆட்சியில், சிறுபான்மை யினருக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் செயல் படுத்தவில்லை,” என, பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசியசெயலாளர் வேலுார் இப்ராஹிம் குற்றம்சாட்டினார்.மத நல்லிணக்க செயல்பாடுகளின் ஒருபகுதியாக, நேற்று கோவைவந்த வேலுார் இப்ராஹிம், கிறிஸ்தவ பாதிரியார் பிரின்ஸ் தளியத்தை சந்தித்து பேச்சு நடத்தினார். சிறுபான்மையினர் நலன்கருதி, பா.ஜ., அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி விளக்கினார்.

மேலும் கூறியதாவது:சிறுபான்மை மக்களை பா.ஜ., கட்சியில் இணைக்கும் நோக்கத்துடன், கோவைவந்துள்ளேன். தற்போது 20 பேர் இணைந்துள்ளனர். மேலும் பலர், இம்மாத இறுதியில் நடக்கும்விழாவில், பாதிரியார் பிரின்ஸ் தளியத் முன்னிலையில் கட்சியில் இணைகின்றனர்.தமிழகத்தில் கஞ்சாவிற்பனை தொடர்ந்து நடக்கிறது. பாலியல் கொடுமைகள் இந்தஆட்சியில் அதிகரித்துள்ளன.

தி.மு.க., அரசு சிறுபான்மையினருக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால், மத்தியஅரசு ஏராளமான நன்மைகளை செய்துள்ளது. பிரதமர் மோடி, சிறுபான்மையினர் கல்விக்காக மட்டும், 5,126 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...